அரசியல் தலைவர்கள் சவுரவ் கங்குலியை மருத்துவமனையில் சந்திக்க காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவருமான சவுரவ் கங்குலி, லேசான இருதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 48 வயதான அவருக்கு இதயத்தின் மூன்று தமனிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், தற்போது குணமடைந்து வருகிறார். இதனையடுத்து அவர் வியாழக்கிழமை (இன்று) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் […]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவருமான சவுரவ் கங்குலி, லேசான இருதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 48 வயதான அவருக்கு இதயத்தின் மூன்று தமனிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், தற்போது குணமடைந்து வருகிறார். இதனையடுத்து அவர் வியாழக்கிழமை (இன்று) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்குலி மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதில் முதல்கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் மருத்துவமனையில் முதலில் அவரை சநதித்தனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி வாயிலாக கங்குலியிடம் நலம் விசாரித்தார். அவர்களைத் தவிர, எண்ணற்ற ரசிகர்களும், கங்குலியின் நலம் விரும்பிகளும் மருத்துவமனைக்குச் சென்று கங்குலிக்காக பிரார்த்தனை செய்தும், அவரது குடும்பத்தினருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதில் அனுமதியின்றி வரும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு டீ, காபி மற்றும் நீர் விநியோகிப்பாளர்களுடன் சிறப்பு ‘சவுரவ் கங்குலி லவுஞ்ச்’ ஒன்றை மருத்துவமனை அதிகாரிகள் அமைத்துள்ளனர். லவுஞ்சில், கங்குலியின்  உடல்நல குறித்து அறிக்கை சீரான இடைவெளியில் பகிரப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலியின் முக்கியத்துவம்

1996 –ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்த  சவுரவ் கங்குலி மேற்கு வங்கத்தில் விளையாட்டின் அடையாளமாக திகழ்கிறார். மேலும் 2000 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், இந்தியா மற்றும் உலகளவில் பரவலாக புகழ் பெற்றார். கடந்த 2002 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற நாட்வெஸ்ட் இறுதிப் போட்டியில் வெற்றிக்குபிறகு,  தனது சட்டையை சுழற்றியதில் இருந்து 2003 நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது வரை, கங்குலி வெற்றிகரமான கேப்டனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். நாட்டின் மிகவும் பிரபலமான பெங்காலி அடையாளமாகவும், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சமானியர்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றார்.

அடுத்து 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்காக முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கங்குலியின் புகழ் தொடர்ந்து. இந்நிலையில்,  2012 ஆண்டு முன்னாள் ஐ.பி.எல் அணியான ‘புனே வாரியர்ஸ் இந்தியா’வுக்காக களமிறங்கிய கங்குலி தனது சொந்த மைதானமாக ஈடன் கார்டனில் கே.கே.ஆருக்கு எதிராக விளையாட வந்தபோது, ​​அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் இரண்டாக பிளவுபட்டனர். இதில் சொந்த அணியை விட கங்குலி விளையாடிய புனே அணிக்கு அதிக ஆதரவு கிடைத்தது.  கங்குலியை அன்பாக ‘தாதா’ (பெங்காலி மொழியில் மூத்த சகோதரர்) என்று அழைக்கிறார், இது கங்குலியின் பெயருக்கு இது சரியாக பொருந்திவிட்டது.

அடுத்து 2015 முதல் 2019 அக்டோபர் வரை மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக இருந்த அவர், கிரிக்கெட்டில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். தொடர்ந்து அக்டோபர் 2019 இல், அவர் பி.சி.சி.ஐ.யின் தலைவரானார். பி.சி.சி.ஐ தலைவராக இருந்தபோதும், அவர் ஒரு திறமையான நிர்வாகியாக தனது திறனை நிலைநிறுத்திக்கொண்டார். மேலும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்படும் ஒரு சில நபர்களில் இவரும் ஒருவர்.

சவுரவ் கங்குலியை மேற்கு வங்கத்தில் மிகவும் விரும்பப்பட்ட நபராக மாற்றியது எது?

2019 மக்களவைத் தேர்தலில்  மேற்கு வங்கத்தில், 18 இடங்களை வென்ற பாஜக, அப்போது பி.சி.சி.ஐ தலைவராக நியமிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் அடையாளம் கங்குலியை தங்களது கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மேலும் அவரை கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மாற்ற முயற்சிக்கிறது என்று யூகங்கள் எழுந்தன.  இது தொடர்பாக. கங்குலி மற்றும் பாஜக இருவரும் இது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும், சமீபத்திய கிரிக்கெட் வீரர் பாஜகவில் சேருவார் என்ற ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

கடந்த டிசம்பர் 27 ம் தேதி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை ராஜ் பவனில் சந்தித்த கங்குலி அவரை ஈடன் கார்டனுக்கு அழைத்தார். அப்போது “மாறுபட்ட பிரச்சினைகள்” குறித்து தனக்கு கங்குலியுடன் தொடர்பு இருப்பதாக தன்கர் கூறியிருந்தார். ஆனால் இது குறித்து யூகிக்க வேண்டாம் என்று கேட்டார். இருப்பினும், மறுநாள் கங்குலி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற அருண்ஜெட்லி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். இதனால் ஊகங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சிகளுக்கு சவுரவ் கங்குலியின் முக்கியத்துவம்

மேற்கு வங்க மக்களிடையே அவருக்கு இருக்கும் அபரிமிதமான புகழ் காரணமாக, கங்குலியைப் பிடிப்பவர் எவரேனும் வங்காளத்தில் உச்சம் பெற வாய்ப்புள்ளது. எந்தவொரு கட்சியிலும் இந்த அந்தஸ்துள்ள ஒரு நபர் இருப்பது தேர்தல் வாய்ப்புகளை இரட்டிப்பாக்கும் குறிப்பாக ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல்கள் நடைபெறும்போது. வங்காள அரசியலில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் கொடுக்கும் ஒரு கட்சிக்கு, கங்குலியை சென்றால் பாஜக அதிக லாபம் பெறும். கங்குலியைப் போன்ற ஒரு நபர் தனது நிர்வாக திறன்களுக்காக அரசியலுக்கு வர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், கங்குலி அவருக்கு அதிக பாராட்டுக்களை வழங்குவதோடு எப்போதும் நல்ல உறவை வைத்திருக்கும் டி.எம்.சி, பாஜகவுடன் பக்கபலமாக இருக்கக்கூடாது என்றும் கங்குலி அரசியலுக்கு வருவதை வங்காளத்தில் பலர் விரும்பவில்லை என்பதும் பொதுவான கருத்து. அரசியல் கட்சிகள் குறிப்பாக டி.எம்.சி இந்த பொது உணர்வை நன்கு அறிந்திருக்கிறது, மேலும் கங்குலியை வீழ்த்த வேண்டாம் என்று கட்டாயப்படுத்தும் முயற்சியில் அதை ஆதரிக்க முயற்சிக்கும். பாஜகவுக்கும் வங்காளத்தில் ஆளும் டி.எம்.சிக்கும் அரசியல் இடத்தை இழந்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கும், கங்குலி அரசியலில் நுழையாதது மிகவும் பயனளிக்கும்.

மேலும் அரசியல் கட்சிகள் சமீபத்திய சுகாதார பயத்தை அதிகம் பயன்படுத்திக்கொண்டுள்ள அரசியல் கட்சிகள் கங்குலிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்த வாய்ப்பளித்துள்ளன. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனையில் கங்குலியை சந்தித்துள்ளனர். திங்களன்று கங்குலியை சந்தித்து சென்ற சிபிஎம் எம்எல்ஏ அசோக் பட்டாச்சார்யா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரசியலில் சேர அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறினார். மேலும் கங்குலி ஒரு விளையாட்டு அடையாளமாக இருந்தால் சிறந்த்து என்று அவர் கூறினார்.

இதுவரை கங்குலியை மருத்துவமனையில் பார்வையிட்டவர் யார்?

மருத்துத்துவமனையில், சிகிச்சையில் இருந்த கங்குலியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், மத்திய வெளியுறவு அமைச்சர் (நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள்) அனுராக் தாக்கூர், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூரியா, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாபன் தாஸ்குப்தா, மாநில அமைச்சர்கள் சட்டோபாத்யாய் மற்றும் அரூப் பிஸ்வாஸ், கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், டி.எம்.சி எம்.எல்.ஏ மற்றும் மறைந்த பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகள் பைசாலி டால்மியா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அப்துல் மன்னன் மற்றும் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் சி.பி.எம் எம்.எல்.ஏ அசோக் பட்டாச்சார்யா ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reason for political leaders to meet saurav ganguly in hospital

Next Story
சதம் அடிப்பதில் கோலியை முந்துகிறாரா வில்லியம்சன்?wiliamson overtakes kohli in test hundred - சதம் அடிப்பதில் கோலியை முந்துகிறாரா வில்லியம்சன்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com