வருகின்ற தீபாவளிக்குள் 5 மெட்ரோ நகரங்களில் 5 ஜி சேவையை தொடங்க விருக்கும், ஜியோ ஸ்டேண்ட் அலோன் என்ற கட்டமைப்பு முறையை பயன்படுத்துகிறது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட நகரங்களில் தீபாவளிக்குள் 5 ஜி சேவையை ஜியோ தொடங்கிறது. டிசம்பர் 2023க்குள் இந்தியா முழுவதும் 5 ஜி சேவை நிறுவ உள்ளது ஜியோ. இந்நிலையில் இதை அமல்படுத்த ஸ்டேண்ட் அலோன் (standalone) கட்டமைப்பு முறையை பின்பற்ற உள்ளது. இந்நிலையில் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ”நான் ஸ்டேண்ட் அலோன்” (Non standalone) முறையை பின்பற்ற உள்ளனர்.
இந்த இரண்டு தேர்வுகள் பற்றி விவரமாக பார்க்கலாம்:
5 ஜி சேவை இரண்டு முறைகளில் அமலுக்கு வர உள்ளது. ஸ்டேண்ட் அலோன் (standalone) மற்றும் நான் ஸ்டேண்ட் அலோன் (Non standalone). இந்த இரண்டு முறையிலும் பல்வேறு பலன்களும், அதேவேளையில் சில குறைபாடுகளும் உள்ளன.
ஜியோ தேர்வு செய்துள்ள ஸ்டேண்ட் அலோன் முறை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களில் இயங்கும், இது 4ஜி சேவையின் நேர்கோட்டில் செயல்படும். இந்நிலையில் னான் ஸ்டேண்ட் அலோன் முறையில் 4ஜியின் கட்டமைப்பில் 5ஜி சேவை இயங்கும். மேலும் இதற்கு குறைந்த முதலீடு போதுமானதாகும்.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் இந்த ஸ்டேண்ட் அலோன் கட்டமைப்பை உருவாக்க ரூ. 2 லட்சம் கோடி செலவிடுகிறது.
இந்நிலையில் இந்த முறையில் அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும். குறைந்த டேட்டாவில் அதிவேக சேவை வழங்கமுடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களில் உள்ள 4ஜி நெட்வொர்க்கை வைத்தே 5 ஜி வழங்க னான் ஸ்டேண்ட் அலோன் திட்டம் வழிவகை செய்கிறது. மேலும் இதற்கு வெறும் ஒரு சாவ்ட்வேர் அப்டேட் மட்டும் போதுமானதாக இருக்கும்.
5ஜி சேவையால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பயன்:
5ஜி சேவையில் இன்டெர்நெட் வேகம் 10ஜிபிஎஸ் ஆக உள்ளது. இதுவே 4ஜியில் 100 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் டேட்டாவை செலவழிப்பதில் 4ஜியின் வேகம் 10 முதல் 100மில்லி செக்கண்ட் ஆனால் 5ஜியோ இதை ஒரு மில்லி செக்கண்டில் செய்கிறது.