இந்தியாவில் மதங்கள் எப்படியான வரையறைகளை கொண்டுள்ளது? – ஆராய்ச்சி முடிவுகள்

அதிகமான இந்தியர்கள் பன்முகத்தன்மையை நாட்டின் ஒரு பொறுப்பாக (24%) பார்ப்பதை விட ஒரு நன்மையாக (53%) பார்க்கிறார்கள்

 Kabir Firaque  

Religions in India, ‘living together separately’ : சமீபத்தில் 30000 நபர்களிடம் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றின் (‘இந்தியாவில் மதம்: சகிப்புத்தன்மை மற்றும் பிரித்தல்’) முடிவில் பெரும்பாலான இந்தியர்கள் மத வேறுபாட்டை மதிக்கிறார்கள், ஆனால் திருமணம் என்று வரும் போது மிகவும் தெளிவாக ஒரு எல்லையை நிர்ணையிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

பிரிக்கப்பட்ட கோளங்கள்

அதிகமான இந்தியர்கள் பன்முகத்தன்மையை நாட்டின் ஒரு பொறுப்பாக (24%) பார்ப்பதை விட ஒரு நன்மையாக (53%) பார்க்கிறார்கள்; மீதமுள்ளவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மீண்டும், 84% இந்தியர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பது உண்மையான இந்தியராக இருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று நம்புகிறார்கள், மற்ற மதங்களை மதிப்பது அவர்களின் மத அடையாளத்தின் மிக முக்கியமான பகுதியாகும் என்று 80% நம்புகிறார்கள் (விளக்கப்படம் 1). இன்னும், ஒவ்வொரு மூன்று இந்தியர்களிலும் சுமார் இருவர் கலப்பு திருமணங்களை நிறுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள் (விளக்கப்படம் 2, அட்டவணை 1).

“இந்தியர்கள் ஒரே நேரத்தில் மத சகிப்புத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும், தங்கள் மத சமூகங்களை பிரிக்கப்பட்ட கோளங்களில் வைத்திருப்பதற்கான நிலையான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் – அவர்கள் தனித்தனியாக வாழ்கின்றனர் என்று இந்த கணக்கெடுப்பின் முதன்மை திட்ட மேலாளர் ஜொனாதன் எவன்ஸ் ஆய்வு, ஒரு மின்னஞ்சலில் கூறினார்.

வெவ்வேறு மதத்தினருக்கு இடையிலான திருமணங்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து புதிய சட்டங்களுக்கு, பல்வேறு மதங்களின் அளவிற்கு மாற்றுவதால் ஏற்படும் சிறிய மாற்றம் என்று கணக்கெடுப்பில் பதில் அளித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் குறித்து கேட்ட போது பெரும்பாலான சிறுபான்மையினர் இந்து குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்துக்களும் அக்கம்பக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஜெய்ன் சமூகத்தினர் இருந்தால் ஏற்றுக் கொள்ள தயாரக உள்ளனர. ஆனால் 36% பேர் அக்கம்பக்கத்தினர் இஸ்லாமியர்களாக இருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தலாக்

பெரும்பான்மை இஸ்லாமியர்கள் முத்தலாக்கிற்கு எதிராக உள்ளனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு தனியாக மத நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற முக்கால்வாசி இஸ்லாமியர்கள் கருத்து தெரிவித்தனர்.

முத்தலாக் விவகாரத்தில் பல்வேறு முக்கிய காரணங்களை இஸ்லாமியர்கள் முன்வைக்கின்றனர். கல்வி அறிவு குறைவாக உள்ளவர்களைக் காட்டிலும் கல்லூரி படிப்பு முடித்தவர்கள் முத்தலாக்கிற்கு ஆதரவு அளிக்கின்றனர் (46% vs 37%). மதம் தங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்று கூறும் முஸ்லிம்கள் முத்தலாக்கை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்துக்கள் அல்லது இஸ்லாமியர்கள்

பெரும்பான்மையான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்ப்பதை வைத்து இந்துக்கள் யார் இஸ்லாமியர்கள் யார் என்று முடிவு செய்கின்றனர். மாட்டிறைச்சி சாப்பிடும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்று 72% இந்துக்கள் கூறுகிறார்கள்; 77% முஸ்லிம்கள் ஒரு நபர் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது என்று கூறுகிறார் (அட்டவணைகள் 5 & 6).

இரு குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் ஒருவருக்கொருவர் பண்டிகைகளை கொண்டாடினால் ஒரு நபர் முறையே இந்து அல்லது முஸ்லீமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

இரு குழுக்களும் மதத்தின் மீதான அடையாள அளவில் வேறுபடுகின்றன. நமாஸ் செய்வது மற்றும் மசூதிகளுக்கு செல்வது முஸ்லீம்களாக இருப்பதற்கு இன்றியமையாதவை என முறையே 67% மற்றும் 61% பேர் கூறியுள்ளனர். இது இந்துக்கள் கோவிலுக்கு செல்வது மற்றும் பிரார்த்தனைகள் இந்துக்களுக்காக இருப்பதற்கு இன்றியமையாதவை என்று கூறும் நபர்களின் (48%) விகிதத்தை காட்டிலும் அதிகமானது.

கருத்துக்கணிப்பின் பின்னணி

இந்த கருத்துக்கணிப்பு நவம்பர் 17,2019 மற்றும் மார்ச் 23, 2020-க்கு இடைபட்ட காலத்தில் எடுக்கப்பட்டது. 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் சுமார் 29,999 நபர்களிடம் நேருக்கு நேர் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் 22,975 நபர்கள் இந்துக்கள் மற்றும் 3336 நபர்கள் இஸ்லாமியர்கள். அந்தமான் நிக்கோர்பர் தீவுகள், லட்சத்தீவுகள், காஷ்மீர் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் கருத்துக் கணிப்பு நடைபெறவில்லை.

இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெய்ன் மதத்தினர் மற்றும் வடகிழக்கில் வாழூம் மக்கள் என 6 குழுக்களை இலக்காக கொண்டு ஓவர் சாம்பிளிங்க் நடைபெற்றது. மத பிரதிநிதித்துவத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க முயன்ற ஒரு வடிவமைப்பு மூலம் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர்-ஜனவரி மாதங்களில் போராட்டங்கள் அரங்கேறியபோது, கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது.

புதிய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களின் பங்கேற்பை சற்று குறைத்திருக்கலாம். காஷ்மீரிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த இயலவில்லை என்றார் எவன்ஸ். “இருப்பினும், இந்தியாவின் ஒட்டுமொத்த முஸ்லீம் மக்கள்தொகையில் 95% பேரின் நம்பிக்கைகள், நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை இந்த கணக்கெடுப்பு பிரதிபலிக்கிறது.”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Religions in india living together separately

Next Story
திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!thrissur pooram keralas largest temple festival - திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com