ஐக்கிய அரபு எமிரேட்: வீரர்களே இல்லாமல், விளையாட்டு மையமாக மாறியது எப்படி?

 UAE, global sports hub: சச்சின் டெண்டுல்கரின், அடுத்தடுத்த செஞ்சுரிகளால் இந்தத் தொடர், ‘பாலைவன புயல்’ என்று அழைக்கப்பட்டது.

By: September 16, 2020, 9:22:33 AM

Sports Tamil News: செப்டம்பர் 19 அன்று, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில், இந்த ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்க ஆட்டம் நடைபெற இருக்கிறது. முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஒரு மார்க்கீ விளையாட்டு லீக் துவக்கத்தை இது குறிக்கிறது. ஒருவேளை அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் 2021 ஐபிஎல் போட்டிகளும் எமிரேட்ஸில் தான் நடக்கும்.

ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்துவது ஒன்றும் பிசிசிஐ-க்கு புதியது கிடையாது. ஏற்கனவே 2009 சீசன் முழுவதும் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. 2014 ஆம் ஆண்டில் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தன. இவை இரண்டும் இந்திய பொதுத் தேர்தலால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை கோவிட் -19 பயம் காரணமாக போட்டிகளில் வெளிநாடுகளில் நடத்தப்படுகின்றன. ஐபிஎல் போன்ற விளையாட்டு போட்டிகளை எமிரேட்ஸில் தொடர்ந்து நடத்துவதற்கு என்ன காரணம்?

விளையாட்டு வீரர்களே பெரிய அளவில் இல்லாத எமிரேட்ஸ், கடந்த டிசம்பரில் நடந்த உலக பயண விருதுகளில், உலகின் முன்னணி விளையாட்டு சுற்றுலா இடத்துக்கான விருதை தட்டி சென்றது எப்படி? 2004 ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் என அந்நாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளது உண்மைதான் என்றாலும், போட்டிகளுக்கு அல்லாமல் போட்டிகளை நடத்தியதற்காக விருதுகளை அள்ளிச் செல்வது எப்படி சாத்தியமானது. அனைத்துக்குமான விடை, அந்நாடுகளில் வசிக்கும் பல நாட்டைச் சேர்ந்த மக்களே.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்புபடி, அந்த நாடுகளில் வசிக்கும் 9.89 மில்லியன் மக்கள் தொகையில் (உலக வங்கியின் கூற்றுப்படி), 88.52 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். அதுவே அவர்களின் பலம்.

சொந்த நாட்டு வீரர்களிடம் இருந்து பெரிய இலக்கு போன்ற எதுவும் இல்லை என்றாலும், ஐக்கிய அரபு எமிரேட் இணையற்ற விளையாட்டு இடமாக மாறியுள்ளது. எமிரேட்ஸை இதுபோன்ற விளையாட்டு மையமாக மாற்றுவது எது என்ற கேள்விக்கு, “எங்கள் நாடு மிகவும் இளம் நாடு. நாங்கள் நிறைய வெளிநாட்டினரைக் கொண்டிருப்பதால், வெளிநாட்டவர்களாக இருக்கும் பல முக்கிய வீரர்களை உருவாக்கியுள்ளோம்.

ஆனால் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வெளிநாட்டவர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற நாங்கள் எதிர்பார்க்கிறோம். இங்கு ஒரு சமூகமாக, அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரே நாடாக மதிக்கிறோம். எங்களிடம் உள்ள உள்கட்டமைப்பு அதிநவீனமானது. வளர்ந்த நாடுகள் செய்வதை பின்பற்றுவதை விட, துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எப்போதும் அனைத்துக்கும் தலைமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறந்ததை நாங்கள் கொண்டு வருகிறோம்.

உலகளாவிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருக்க, எங்கள் அரசாங்கம் பின்பற்றிய யுக்திகளில் ஒன்று விளையாட்டு. விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதே, மற்ற நாடுகளை ஈர்க்க, எளிதான அணுகுமுறையாக நாங்கள் பார்க்கிறோம். அதன்படியே, சர்வதேச தரத்திற்கு ஏற்ப வழங்கப்படும் பயிற்சி உபகரணங்கள் மற்றும் வசதிகள் குறித்து நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம்” என்கிறார், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தடகள சம்மேளனத்தின் இயக்குனர் ஹர்மீக் சிங்.

விளையாட்டுகளைத் தாண்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல வேண்டிய இடமாக உள்ளது என்றாலும், இந்த நேரத்தில், முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. வெளிநாட்டினர் மற்றும் விளையாட்டு போட்டியாளர்கள் மத்தியில், எமிரேட்ஸ் உள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்ற தளமாக உள்ளது.

கிரிக்கெட்:

1998 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான முத்தொடர் ஷார்ஜாவில் நடந்தது. சச்சின் டெண்டுல்கரின், அடுத்தடுத்த செஞ்சுரிகளால் இந்தத் தொடர், ‘பாலைவன புயல்’ என்று அழைக்கப்பட்டது. தீவிரவாத பிரச்சனைகள் காரணமாக பாகிஸ்தான் தங்கள் சொந்த நாட்டில் போட்டிகளை நடத்த தடை இருந்த காலகட்டத்தில், பாகிஸ்தானுக்கான ஹோம் கிரவுண்டாக ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் கருதப்பட்டது. இதையெல்லாம் தாண்டி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)யின் தலைமையகமே துபாயில் தான் உள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் அணி, ஒரு இணை நாடாக, 1996 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளுக்கு தகுதி பெற்றது. இதில், 1996 ல் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை, வென்றது.

கால்பந்து:

எமிரேட்ஸின், மிகவும் பிரபலமான விளையாட்டாக கால்பந்து திகழ்கிறது. ஆங்கில கால்பந்து நிறுவனமான மான்செஸ்டர் சிட்டி அபுதாபி அரச குடும்பத்தின் உறுப்பினரான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யானுக்கு சொந்தமானது. இதுவே, அந்த நாட்டில் கால்பந்து எவ்வளவு பிரபலம் என்பதற்கு சான்று. 2003-ல் யு -20 ஆண்கள் உலகக் கோப்பை, 1996 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையை நான்கு ஆண்டுகளாக (2009-2010 மற்றும் 2017-18) எமிரேட்ஸ் நடத்தியுள்ளது. அதேநேரம், எமிரேட் தேசிய ஆண்கள் அணி உலகில் 71 வது இடத்திலும் ஆசியாவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

இதேபோல், பேயர்ன் மியூனிக், மான்செஸ்டர் யுனைடெட், அர்செனல் மற்றும் லிவர்பூல் போன்ற பல சிறந்த ஐரோப்பிய அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முகாம்களை நடத்தியுள்ளன.

டென்னிஸ்:

WTA மற்றும் ATP என்ற இரண்டு பணக்கார சுற்றுப்பயண நிகழ்வுகளில் ஒன்றை துபாய் ஆண்டுதோறும் ஹோஸ்ட் செய்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களுக்கு ஒரு முக்கிய இல்லமாக இருந்து வருகிறது. முக்கியமாக அதன் வரி சலுகைகள் மற்றும் வசதிகள் காரணமாக போர்னா கோரிக், கரேன் கச்சனோவ், லூகாஸ் பவுல் போன்ற உலக தரவரிசை வீரர்கள், துபாயில் வசிக்கின்றனர். மேலும் ரோஜர் ஃபெடரரும் துபாய் நகரத்தில் ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளதாகதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயர்ந்த தரவரிசை டென்னிஸ் வீரர் ஒமர் அலவாடி இருக்கிறார்.

டேபிள் டென்னிஸ்:

துபாய் 2013 முதல் 2017 வரை வலிமைமிக்க சீன தேசிய டேபிள் டென்னிஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக இருந்தது. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்த நகரம் உலக கோப்பையையும் நடத்தியது. நாட்டின் மிக உயர்ந்த தரவரிசை வீரராக சலா அல்பலுஷி (404) உள்ளார். ஐ.டி.டி.எஃப் தரவரிசையில் பெண் வீரர்கள் யாரும் இல்லை.

பேட்மிண்டன்:

துபாய் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் பைனல்களை (ஆண்டு இறுதி) 2014 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகளாக நடத்தியது. ஆனால் இதுவரை அந்நாட்டில் இருந்து முக்கிய பேட்மிண்டன் வீரர் யாரும் உருவாக்கவில்லை.

ஃபார்முலா ஒன்

அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் காலெண்டரில் 2009 ஆம் ஆண்டு தொடக்க பந்தயத்தில் இருந்து ஒரு நிரந்தர அங்கமாக உள்ளது. இருப்பினும், மோட்டார்ஸ்போர்ட்டின் உச்சத்தில் போட்டியிடும் ஒரு ஃபார்முலா ஒன் வீரரை எமிரேட் இன்னும் உருவாக்கவில்லை.

ரக்பி:

உலக ரக்பி செவன்ஸ் தொடரில் ஒரு முக்கிய நிகழ்வான துபாய் ரக்பி செவன்ஸை துபாய் நடத்துகிறது. ஆண்கள் நிகழ்வு முதன்முதலில் 1970 இல் தொடங்கியது, துபாய் ரக்பி செவன்ஸ் வலைத்தளத்தின்படி, “மத்திய கிழக்கில் மிக நீண்ட காலமாக நடைபெறும் விளையாட்டு நிகழ்வு இது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்து நிகழ்வுகளும் தி செவன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. 2008ம் ஆண்டே இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுவிட்டது.

கோல்ஃப்:

ஐக்கிய அரபு அமீரகம் மதிப்புமிக்க பிஜிஏ ஐரோப்பிய சுற்றுப்பயண நிகழ்வுகளான துபாய் பாலைவன கிளாசிக் மற்றும் டிபி உலக சுற்றுப்பயண சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது. எனினும், தற்போதைய உலக தரவரிசையில், எமிரேட்டில் இருந்து நான்கு கோல்ப் வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் அஹ்மத் அல் முஷாரெக் (பட்டியலில் உள்ள ஒரே தொழில்முறை வீரர்) மற்றும் அமெச்சூர் கோல்ப் வீரர்களான அஹ்மத் ஸ்கைக், சைஃப் தபேட் மற்றும் அப்துல்லா அல் குபைஸி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Sports tamil news how uae became a global sports hub

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X