Advertisment

ஸ்டாலின்- ஆர்.என் ரவி மோதல்: அரை நூற்றாண்டுக்கு முன்பே ஆளுனர் பதவியை எதிர்த்த தமிழக அரசு

ஆளுநரின் அலுவலகம் ‘பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்பின் மரபு’; அவர் நியமனம் செய்யப்பட்ட முறை ‘ஜனநாயக அமைப்பில் ஒரு அனாக்ரோனிசம்’; 50 ஆண்டுகளாக கூறி வரும் தமிழக அரசு

author-image
WebDesk
New Update
stalin

ஆளுநர் ரவியின் செயல்பாடு “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று ஸ்டாலின் கூறினார். (கோப்பு)

Rishika Singh

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 8 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி, மாநில ஆளுநர் என்.ரவி “ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான” செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும், அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க குடியரசு தலைவர் “தகுந்த நடவடிக்கை” எடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.

முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில், 2021ல் பதவி ஏற்றது முதல், ஆளுநர் ரவியின் செயல்பாடு "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று ஸ்டாலின் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் சட்டமன்றத்தையும் ஆளுநர் ரவி புறக்கணித்ததாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்தியதாகவும் ஸ்டாலின் கூறினார். ஆர்.என்.ரவியை “ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர்” என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், “அரசியல் சாசனத்தின் உயர் பதவியில் இருந்து அவரை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படியுங்கள்: பொது சிவில் சட்டம்: இந்து கூட்டுக் குடும்ப வரிச் சலுகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏன்?

ஆனால் ஜனநாயக அமைப்பில் ஆளுநரின் பங்கு பற்றிய தற்போதைய பதட்டங்களுக்கு முன்பே, ஆளுநரின் பதவி குறித்த விமர்சனங்களை ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாடு எழுப்பி வருகிறது.

மத்திய- மாநில உறவுகளில் ஆளுநரின் பங்கு

1967 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதுவரை, மாநில மற்றும் தேசிய தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன, மேலும் இந்திய தேசிய காங்கிரஸுக்கு தேர்தலில் நிகரில்லாத நிலை இருந்தது. இருப்பினும், 520 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 283 இடங்களைக் கைப்பற்றிய போதிலும், 1967 பொதுத் தேர்தலில் முதன்முறையாக காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. மெட்ராஸ் (தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படுகிறது) உட்பட ஒன்பது மாநிலங்களையும் இழந்தது.

ஜவஹர்லால் நேருவின் மறைவுடன், மாறிவிட்ட சூழலுக்கு மத்தியில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். சீனாவுடனான 1962 போரின் இழப்பு மற்றும் உகந்த பொருளாதார நிலையை விட குறைவான சூழல் போன்றவை மேலும் பல வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழக்கச் செய்தது.

மாநிலங்களில் புதிய கட்சிகள் மற்றும் தலைவர்கள் மற்றும் மத்தியில் காங்கிரஸ் இருந்த நிலையில், மத்திய-மாநில உறவுகள் சோதிக்கப்பட்டன. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள், மத்திய-மாநில உறவுகளின் ஒட்டுமொத்த அரசியலமைப்புத் திட்டம் மற்றும் அவற்றுக்கிடையேயான விதிகளை மறுஆய்வு செய்வது சர்ச்சைகளைத் தீர்க்கும் என்று நம்பின.

1969 ஆம் ஆண்டில், மத்திய அரசாங்கம் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை (ARC) நியமித்தது, இது மத்திய-மாநில உறவுகள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது. ஆளுநரைப் பொறுத்தவரை, முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும், அவரது அரசியலமைப்புப் பங்கை நிறைவேற்ற வேண்டும், நிர்வாகம் குறித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று அறிக்கை கூறியது.

publive-image

ஜூலை 10, 1973 இல் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை.

தற்போதுள்ள அமைப்பில் ஒட்டிக்கொள்வதை இந்த அறிக்கை பெரிதும் விரும்புகிறது, பின்னர் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் திறன் கொண்டது என்று கூறியது. பின்னர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜூலை 10, 1973 அன்று, ARC ஐ விமர்சித்த மாநிலத்தின் சொந்த குறிப்பேட்டில் இருந்து தமிழக முதல்வர் மு. கருணாநிதி குறிப்புரை வாசித்த செய்தியை வெளியிட்டது.

“மத்திய அரசும், நாடாளுமன்றமும் தங்களைத் தாங்களே உள்வாங்கிக்கொள்ளவும், மாநிலப் பட்டியல் தொடர்பான விஷயங்களில் தலையிடவும் முயன்ற விதம் மற்றும் அதிர்வெண் ஆகியவை, முழு நாட்டின் முழு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்வது குறித்து ஒரு கவலையின் தோற்றத்தை உருவாக்குகிறது," என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அறிக்கைகள் கூறியவை

1969ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பிறகு, மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைப்பது குறித்து கருணாநிதி பேசினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது, அதன் அறிக்கை 1971 இல் வெளிவந்தது.

அதன் நோக்கம், "இந்திய அரசியலமைப்பின் விதிகளைக் குறிப்பிடுவதன் மூலம், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரு கூட்டாட்சி அமைப்பில் நீடிக்க வேண்டிய உறவு பற்றிய முழு கேள்வியையும் ஆராய்வதும், அரசியலமைப்பில் பொருத்தமான திருத்தங்களை பரிந்துரைப்பதும் ஆகும்.” மாநிலங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி. இது மாநிலத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,வால் நீண்ட காலமாகப் போராடி வந்த இலட்சியத்திற்கு ஏற்ப இருந்தது.

ராஜமன்னார் கமிட்டி தனது அறிக்கையில் சில தனித்துவமான ஆலோசனைகளை வழங்கியது. அகில இந்தியப் பணிகளுக்கு (இந்திய நிர்வாகப் பணி மற்றும் இந்தியக் காவல் பணி போன்றவை) ஆட்சேர்ப்பு என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அரசிதழ் சேவைகளின் உறுப்பினர்களை மாற்றுவதன் மூலமாகவோ அல்லது நேரடி ஆட்சேர்ப்பு மூலமாகவோ இருக்க வேண்டும் என்று அறிக்கை கூறியது. இது சேவைகளை மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதாக இருக்கும்.

ஆளுநர் தொடர்பான பரிந்துரைகளில், அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு புதிய ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் ஆளுநர்களுக்கு "அறிவுறுத்தல் கருவிகளை" வழங்க முடியும் என்றும் கூறியது. ஆளுநர் மத்திய அரசிடம் எந்தெந்த விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் அல்லது மத்திய அரசு அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய விஷயங்களைக் குறிக்கும் வழிகாட்டுதல்களை இவை வகுக்கும். மாநிலங்களில் அவசரநிலையை விதிக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை கையாளும் பிரிவுகள் 356 மற்றும் 357 "முற்றிலும் தவிர்க்கப்படலாம்" என்று அறிக்கை கூறியது. "மாற்று முறையில், மத்தியில் ஆளும் கட்சியின் தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு எதிராக மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க அரசியலமைப்பிலேயே போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்," என்று அறிக்கை கூறியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 1974 ஆம் ஆண்டு மாநிலத்தின் சட்டமன்றத்தில் 'மாநில சுயாட்சி மற்றும் ராஜமன்னார் குழு அறிக்கை பற்றிய தமிழ்நாடு அரசின் கருத்துக்களை' முன்வைத்தது. அப்போது, ஆளுநரின் அலுவலகத்தை "பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்பின் மரபு" என்றும், அவர் நியமனம் செய்யப்பட்ட முறையை "ஜனநாயக அமைப்பில் ஒரு அனாக்ரோனிசம் (இக்காலத்திற்கு பொருந்தாத பழையமுறை)" என்றும் தமிழக அரசு கூறியது.

அதில், "அவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மற்றும் பொறுப்பான ஒரு செயல்பாட்டாளர் என்பதால், உள்ளூர் நிலைமைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை அவர் புரிந்துகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது." அவரது அலுவலகத்திற்குச் செய்யப்பட்ட செலவுகள் "சமூகத்தின் சோசலிச வடிவத்துடன் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை" என்று அது கூறியது.

அதன் விமர்சனத்தில் ஒரு படி மேலே சென்று, "செலவு என்பது வீண் செலவாகும், அதை நன்றாகக் குறைக்கலாம்... ஆளுநர் பதவியை அகற்றுவதற்கான நேரம் கனிந்துவிட்டது" என்று கூறியது. அதற்கு பதிலாக தற்போது ஆளுநர் கவனித்து கொள்ளும் பணிகளை முதல்வர் நிறைவேற்றுவார்.

மரணம், ராஜினாமா போன்றவற்றால் முதல்வர் பதவி காலியாகும் சூழ்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லையெனில் சட்டசபை தானாக கலைந்துவிடும் என்று மாற்று வழிகளையும் முன்வைத்தது. புதிய முதல்வர் பதவியேற்கும் வரை மாநில தலைமை நீதிபதி நிர்வாகத்தை பொறுப்பேற்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பரிந்துரைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. சமீபகாலமாக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் ஏற்பட்ட மோதலின் வெளிச்சத்தில், தி.மு.க.,வும் இதே பாணியில் பதவி குறித்து அடிக்கடி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. டிசம்பர் 2022 இல், எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா ட்விட்டரில், ஆளுநர் பதவி ஜனநாயகத்தில் 'அநேகமாக மிகவும் பயனற்றது' என்று கூறினார். 1967 முதல் 1969 வரை கருணாநிதிக்கு முன் முதல்வராக இருந்த தி.மு.க நிறுவனர் சி.என் அண்ணாதுரையின் தமிழ் வாசகத்தை மாநில வரலாற்றிலிருந்து எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டார். அதில் அண்ணாதுரை கூறிய ஆடுக்கு தாடி எதுக்கு, ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் எதுக்கு, இரண்டும் தேவையற்றது என்பதை டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment