Advertisment

பொது சிவில் சட்டம்: எச்சரிக்கையுடன் மசோதாவுக்கு காத்திருக்கும் காங்கிரஸ்

பொது சிவில் சட்டத்தை மீண்டும் ஆய்வு செய்வதற்கான சட்ட ஆணையத்தின் முடிவை மறுத்த காங்கிரஸ், அடுத்த கட்டமாக பா.ஜ.க அரசின் ஒரு வரைவு மசோதா வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress Parliamentary Party, Sonia Gandhi, Narendra Modi, பொது சிவில் சட்டம்: எச்சரிக்கையுடன் மசோதாவுக்கு காத்திருக்கும் காங்கிரஸ், காங்கிரஸ், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, Uniform Civil Code, Congress, Law Commission, Law Commission of India, Indian Express, India news, current affairs

சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் குறிப்பு மற்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை மீண்டும் ஆய்வு செய்வதற்கான சட்ட ஆணையத்தின் முடிவை மறுத்த காங்கிரஸ், அடுத்த கட்டமாக பா.ஜ.க அரசின் ஒரு வரைவு மசோதா வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளது. மசோதா இல்லாத நிலையில் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகளுடன் அவசரப்படுவதை தவிர்த்து வருகிறது.

Advertisment

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட காங்கிரஸின் நாடாளுமன்ற வியூகக் குழுக் கூட்டத்தில், “பரம்பரைச் சமத்துவம் போன்ற தனிநபர் சட்டங்களில் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை கட்சி எதிர்க்கக் கூடாது. இது ஒருபுறம் இருக்க, பெரும்பாலான தலைவர்களும் கட்சியும் பொது சிவில் சட்டம் பன்முகத்தன்மையின் மீதான தாக்குதலாக இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான தலைவர்கள், பொது சிவில் சட்டம் ஒரு திசை திருப்பும் தந்திரமாகவும், எதிர்ப்பு இல்லாமல் குறிப்பிட்ட குழுவின் ஆதரவைப் பெறும் அரசியல் முயற்சியாகவும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். மேலும், வெறும் அறிக்கைகளின் அடிப்படையில் பா.ஜ.க பொறியில் காங்கிரஸ் சிக்கக் கூடாது என்று வாதிட்டனர். அரசாங்கம் ஒரு மசோதாவை வெளியிடும் வரை கட்சி காத்திருக்க வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த சில தலைவர்கள், கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பில் கடுமையாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தவிர, எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், சல்மான் குர்ஷித், மனிஷ் திவாரி, சசி தரூர், பிரமோத் திவாரி, ரந்தீப் சுர்ஜேவாலா, சக்திசிங் கோஹில், தீபேந்தர் ஹூடா மற்றும் சையத் நசீர் உசேன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜூலை 20-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான கட்சியின் வியூகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க-வின் சுஷில் குமார் மோடி தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாடாளுமன்ற குழு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பொது சிவில் சட்டத்தில் பங்கேற்பவர்களின் கருத்துக்களை கேட்டு அழைப்பு விடுத்த சட்ட ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் மீது சட்ட விவகாரத் துறை, சட்டமன்றத் துறை மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக்களை கேட்க திங்கள் கிழமை ஒரு கூட்டத்தை கூட்டியது.

பொது சிவில் சட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றுவதன் மூலம் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளி அந்தரத்தில் விட்டுவிடாது. ஆனால், அதன் நிலைப்பாட்டை அறிவிக்க மசோதா அச்சில் வரும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. “பொது சிவில் சட்டத்துக்கு எங்கள் எதிர்ப்பில் அரசியல் ரீதியாகவும் மற்ற வகையிலும் அதிக பிளவு இல்லை. ஆனால் உரை எங்கே என்பது கேள்வி. அவர்கள் என்ன சட்டங்களை மீறுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஏதேனும் ஆலோசனை நடந்துள்ளதா… எனவே, நாங்கள் காத்திருப்போம்,” என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ஒருவர் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

அரசியல் கண்ணிவெடி பிரச்னைகள்

காங்கிரஸ் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது, ஆனால் இந்த பிரச்சினை ஒரு அரசியல் கண்ணிவெடி என்பதை நன்கு அறிந்தே எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுக்கிறது. இதில் மசோதா போன்ற உறுதியான எதுவும் இல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் விவகாரத்தை மையப்படுத்த பா.ஜ.க-வுக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை.

“அதே நேரத்தில்… எல்லா மதங்களிலும் உள்ள மரபான உரிமைகள் சமத்துவம் போன்ற தனிப்பட்ட சட்டங்களில் சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். தனிப்பட்ட சட்டங்களின் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை எதிர்க்கப் போவதில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக பன்முகத்தன்மை மீதான தாக்குதலுக்கு நாங்கள் எதிரானவர்கள். இது முஸ்லீம்களைப் பற்றியது மட்டுமல்ல. பல சிக்கல்கள் உள்ளன… பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள்… இந்துக்களில் கூட… தென்னிந்திய இந்து திருமணங்கள் தொடர்பான நடைமுறைகள்… ஜைனர்களின் விஷயத்தில்… சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்கொலைத் தண்டனையை ஈர்க்காது… பொது சிவில் சட்டம் இவை அனைத்தையும் அழுத்த முடியாது.” என்று ஒரு தலைவர் கூறினார்.

பெரும்பாலான தலைவர்கள் பொது சிவில் சட்டம் பற்றிய பேச்சு மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து தேவையில்லாத திசைதிருப்பும் உத்தி என்று வாதிட்டனர்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்புத் த்லைமை ஜெய்ராம் ரமேஷ், பொது சிவில் சட்டம் தொடர்பான பரிந்துரைகளைப் பெறுவதற்கான சட்ட ஆணையத்தின் முடிவு குறித்து ஜூன் 15-ம் தேதி கட்சி அறிக்கை வெளியிட்டதாகக் கூறினார். “ஜூன் 15 முதல் ஜூலை 1 வரை காங்கிரஸ் கூறியதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. எனவே, ஜூன் 15-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நாங்கள் உறுதியாக நிற்கிறோம். ஒரு வரைவு மசோதா இருந்தால் விவாதம் நடக்கும் போது, ​​நாங்கள் நிச்சயமாக பங்கேற்போம், முன்மொழியப்பட்ட அனைத்தையும் ஆராய்வோம் ஆனால், தற்போது எங்களிடம் இருப்பது சட்ட ஆணையத்தின் பொது அறிவிப்பு மட்டுமே… புதிதாக எதுவும் இல்லை. இந்த அறிக்கையுடன் எதையும் சேர்க்க எங்களுக்கு புதிதாக எதுவும் நடக்கவில்லை” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் ஜூன் 15-ம் தேதி சட்ட ஆணையத்தின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துகளைப் பெறுவதாகக் கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment