கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செயல்திறன் சிறப்பாக உள்ளது; பூஸ்டர் தற்போது தேவையில்லை – ஆய்வில் தகவல்

2ஆம் அலையில் டெல்டா மாதிரிகளுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மருத்துவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய மிகப்பெரிய ஆய்வில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்களிடையே கடுமையான கோவிட்-19 மற்றும் டெல்டா மாறுபாட்டின் அபாயத்தை கணிசமாக குறைப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

ஆய்வு முடிவுகள்

கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ் 80 விழுக்காடு செயல்திறனும், கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் 69 விழுக்காடு செயல்திறனும் கொண்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் செயல்திறன், 6 முதல் 8 வார இடைவெளியில் செலுத்தப்பட்ட டோஸ்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜியின் இயக்குநர் மனோஜ் முர்ஹேகர், 12 வார இடைவெளியை கணக்கிட போதுமான தரவுகள் இல்லை. இதில் முக்கியம், தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தது 60 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், தற்போது உடனடியாக நமக்கு பூஸ்டர் டோஸ் தேவையில்லை. தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது என்றார்.

ஐசிஎம்ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியைச் சேர்ந்த டாக்டர் பிரக்யா யாதவ் கூறுகையில், ” 2ஆம் அலையில் டெல்டா மாதிரிகளுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

ஆய்வு என்ன?

இந்த ஆய்வு 2021 மே – ஜூலை மாதங்களுக்கு இடையில் 11 மருத்துவமனைகளில்நடத்தப்பட்டது. அதில், 1,073 பேருக்கு கடுமையான கோவிட் பாதிப்புகளும், 2,264 பேருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்டும் வந்திருந்தது.

அவர்களில், 6 விழுக்காடு பேர் கடுமையான கோவிட் பாதிப்புக்கும், 17 விழுக்காடு பேர் கொரோனா நெகட்டிவ் நபர்களும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்தியிருந்தனர். 16 விழுக்காடு கடுமையான பாதிப்பு நபர்களும், 28 விழுக்காடு கொரோனா நெகட்டிவ் நபர்களும் கோவிஷீல்டு ஒரு டோஸ் மட்டும் செலுத்தியிருந்தனர். முழுமையான தடுப்பூசியின் செயல்திறன் 80 விழுக்காடு ஆகும்.

அதே போல், 887 பேர் கடுமையான கோவிட் பாதிப்புக்கும், 1,384 பேர் கொரோனா நெகட்டிவ் நபர்களுக்கும் நடத்திய ஆய்வு முடிவில், கடுமையான பாதிப்பில் 3.4 விழுக்காடு பேரும், கொரோனா நெகட்டிவ் பாதிப்பில் 5.3 விழுக்காடு பேரும் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தியிருந்தனர்.

மேலும், கடுமையான பாதிப்பு கொண்ட 16 விழுக்காடு பேரும், கொரோனா நெகட்டிவ் பாதிப்பு 28.3 விழுக்காடு பேரும், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே செலுத்தியுள்ளனர். முழுமையான தடுப்பூசியின் செயல்திறன் 69 விழுக்காடு ஆகும்.

இந்த ஆய்வானது பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • அமிர்தா மருத்துவ அறிவியல் கழகம், கொச்சி;
  • ஹம்டார்ட் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டெல்லி
  • எய்ம்ஸ் ஜோத்பூர்,
  • ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி, மைசூரு;
  • அரசு மருத்துவக் கல்லூரி, நாக்பூர்;
  • எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, சென்னை;
  • ஜிப்மர்-புதுச்சேரி; சூரத்
  • முனிசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், டெல்லி,
  • எய்ம்ஸ்- ரிஷிகேஷ் , புவனேஸ்வர், ஜோத்பூர்
  • ICMR – தேசிய வைராலஜி நிறுவனம், புனே.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vaccine act very effectively against severe corona virus

Next Story
புயல்களுக்கு இப்படித்தான் பெயர் வைப்பார்களா ? அடுத்து உருவாக இருக்கும் 7 புயல்களுக்கு பெயர் தயார் !Cyclone Fani Name Fact Checking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express