Advertisment

நெக்ரோபிலியா என்றால் என்ன? இந்தியாவில் இது குற்றமா?

பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் அல்லது இயற்கைக்கு மாறான குற்றங்களின் கீழ் வராது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka-High-Court-

Karnataka High Court

Necrophilia: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

Advertisment

மே 30 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது. இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் தண்டனை பெறாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியது.

மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது, ஐபிசி 377வது பிரிவின் கீழ் திருத்தம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியது. மேலும் இது மத்திய அரசு திருத்தம் செய்வதற்கான நேரம் என்றும் கூறியது.

கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு என்ன?

ஜூன் 25, 2015 அன்று, 21 வயதான பெண் தனது கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜு அந்த பெண்ணைப் பிடித்து இழுந்து வாயை மூடி, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது ஐபிசி பிரிவு 302 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிறகு அவர் அந்த பெண்ணை "கற்பழிப்பு" செய்தார்.

காவல்துறையினர் ரங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐபிசி பிரிவு 302 மற்றும் 376 கொலை மற்றும் கற்பழிப்பு குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாட்சியங்களை ஆராய்ந்த செஷன்ஸ் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை கொலை செய்து பின்னர் அப்பெண்ணின் உடலை "கற்பழிப்பு" செய்தார் என்பது சந்கேத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆனதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

ஐபிசியின் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை "கற்பழிப்பு" செய்ததற்காக 376வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. உடலை கற்பழிப்பு செய்ததற்காக 376வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.

"ஒப்புக் கொள்ள வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த உடலில் உடலுறவு கொண்டார்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், இது பிரிவுகள் 375 (கற்பழிப்பு) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் குற்றமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவாகிறது. இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப்படாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) கீழ் தண்டனைக்குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், "இறந்த உடலில் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா தவிர வேறில்லை" என்று தெளிவுபடுத்தியது.

நெக்ரோபிலியா என்றால் என்ன?

ரங்கராஜு @வாஜபேயி vs கர்நாடகா மாநிலம் என்ற வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், "நெக்ரோஃபிலியா" என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான

ஈர்ப்பு என்று குறிப்பிட்டது.

இந்தியாவில் நெக்ரோபிலியா ஒரு குற்றமா?

இன்றுவரை, ஐ.பி.சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றங்களின் கீழ் "நெக்ரோபிலியா" ஒரு குறிப்பிட்ட குற்றமாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நீதிமன்றம் 297 இன் கீழ் சட்டம் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டது. மனித சடலத்திற்கு அவமதிப்பு என்ற 297-வது பிரிவில் சட்டம் கொண்டு வரலாம் எனக் கூறியத.

நெக்ரோபிலியாவை தடை செய்த நாடுகள்?

நெக்ரோபிலியாவைத் தண்டிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விதியும் இந்தியாவில் இல்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சட்டம், 2003, பிரிவு 70 இன் கீழ் நெக்ரோபிலியா, குற்றம் என சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இது தவிர, கனடா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவும் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலியாவைத் தடை செய்கின்றன.

கர்நாடக நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது என்ன?

ஐபிசி 377வது பிரிவின் கீழ் விதிகளை திருத்தியமைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரம் புதிய விதியை இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. அதில் நெக்ரோபிலியா குற்றத்திற்கு அபராதத்துடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கலாம் என பரிந்துரைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment