Advertisment

SWIFT என்றால் என்ன? ரஷ்யா நீக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

கடந்த காலத்தில் ஒரேயொரு நாடு மட்டுமே இந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அது ஈரான். இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SWIFT என்றால் என்ன? ரஷ்யா நீக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நடவடிக்கையானது "சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவது" என்று கூட்டறிக்கை கூறுகிறது. இதன்படி ரஷ்ய வங்கிகள் தங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வங்கிகளுடன் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள முடியாது அர்த்தமாகும்.

இந்தக் கூட்டுத் தடையானது, உக்ரைனுக்கு ரஷ்ய படைகள் நுழைந்தபிறகு, மாஸ்கோவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும். ஏனென்றால், முக்கிய இயற்கை வளங்கள் வர்த்தகத்திற்காக SWIFT தளத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஒரு நாட்டை மோசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான வருமானத்தை பாதிக்கும்.

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகமான SWIFT-லிருந்து ஒரு நாட்டைத் துண்டிப்பது ஒரு நாட்டின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதற்குச் சமமாகும் என கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் ஒரேயொரு நாடு மட்டுமே இந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அது ஈரான். இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.

தற்போது, ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கை ஓரளவு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. சில ரஷ்ய வங்கிகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை மேலும் விரிவுப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SWIFT என்றால் என்ன?

SWIFT என்பது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகம் ஆகும். பணப் பரிமாற்றங்கள் போன்ற உலகளாவிய பணப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பான தளமாகும்.

SWIFT வாயிலாக பணத்தை பரிமாற்றம் செய்திட முடியாது. 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே உள்ளக செய்தியிடல் அமைப்பாக செயல்படுகிறது.

பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய பதினொரு தொழில்துறை நாடுகளின் மத்திய வங்கிகளால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் நோக்கம் என்ன?

SWIFT தளத்திலிருந்து ரஷ்ய வங்கிகளைத் நீக்குவது, அந்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் சொல்லப்போனால், ரஷ்யா பணப்பரிவர்த்தனைக்கு "டெலிபோன் அல்லது ஃபேக்ஸ் இயந்திரத்தை" சார்ந்திருக்க வேண்டிவரும்

ரஷ்ய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் செர்ஜி அலெக்சாஷென்கோவின் கூற்றுப்படி, " திங்கட்கிழமை ரஷ்ய நாணய சந்தையில் ஒரு பேரழிவு இருக்கும் என்றார்.

மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உருசுலா வான் டேர் லேயன் கூறுகையில், " இந்த முடிவு, ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை "போருக்காக பயன்படுத்துவதிலிருந்து" ரஷ்ய அதிபர் மாளிகையை தடுத்து நிறுத்தும்" என்றார்.

குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கிகளை தேர்ந்தெடுப்பது, பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்யும். அதேசமயம், ஐரோப்பாவில் அதிக தாக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கும். ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்கவும், ரஷ்யாவிலிருந்து எரிசக்தியை வாங்கவும் முடியும்

மாஸ்கோ 2014இல் ஏற்பட்ட பொருளாதார தடைகளை தொடர்ந்து, வங்கிகளைப் பாதுகாக்க வெளிநாட்டு பண இருப்பைப் பெருக்கி வந்தது. 2022 ஜனவரியில் கையிருப்பு அதிகபட்சமாக $630 பில்லியனைத் தொட்டது. புதிய நடவடிக்கைகள் நாட்டின் மத்திய வங்கிக்குக் கிடைக்கும் கையிருப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்விஃப்ட் சேவைக்கு மாற்றாக பல தீர்வுகள் முயற்சிக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் திறன்வாய்ந்தவை அல்ல.

கடந்த ஏழு ஆண்டுகளில், ரஷ்யாவும், SPFS (நிதிச் செய்திகளை மாற்றுவதற்கான அமைப்பு) உட்பட மாற்று வழிகளில் பணியாற்றியுள்ளது. இது ரஷ்யாவின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்ட SWIFT நிதி பரிமாற்ற அமைப்புக்கு சமமானது. SWIFT க்கு சாத்தியமான சவாலை உருவாக்க சீனர்களுடன் ரஷ்யா கைக்கோர்த்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தடைகள் மீதான தாக்கம் தெரிவதற்கு சில காலம் ஆகும். ஆனால், மேற்கத்திய நாடுகளின் உடனடி தாக்கத்தை இந்த தடைகள் வெளிப்படுத்தும்.

சமீபத்திய பொருளாதாரத் தடைகள் குறித்து பேசிய உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், "இந்த இருண்ட நேரத்தில் உண்மையான உதவி" என்று குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment