Advertisment

பி.பி.சி உரிமையாளர் யார்? நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது?

குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையான நிலையில் பி.பி.சி நிறுவனம் பற்றிய தகவல்களை இங்கு பார்ப்போம். நிறுவனத்தின் உரிமையாளர் யார்? நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? அதன் வருவாய், இங்கிலாந்து அரசாங்கத்துடனான உறவு ஆகியவற்றை குறித்துப் பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
பி.பி.சி உரிமையாளர் யார்? நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது?

பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பி.பி.சி) சமீபத்தில் 'இந்தியா: மோடி கேள்விகள்' ( ‘India: The Modi Question’) என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பிறகு அந்த நிறுவனம் இந்தியாவில் பேசு பொருளாகியுள்ளது. இந்திய அரசு அந்த ஆவணப்படம் தொடர்புடைய சமூக வலைதள லிங்க்குளை தடை செய்தது. அந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் வகையிலும், அதை வெளியிட்ட நிறுவனம் "காலனித்துவ மனநிலை" கொண்டதாக உள்ளது எனவும் குற்றஞ்சாட்டியது.

Advertisment

கடந்த வாரம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதில், அவரைப் பற்றிய ஆவணப்படத்தின் குணாதிசயத்தில் தான் உடன்படவில்லை என்று கூறினார்.

பி.பி.சியின் 'இந்தியா: மோடி கேள்விகள்' ஆவணப்படம் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் அதில் உயிரிழந்தவர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வீடியோ லிங்க்குகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் உள்பட பலர் இந்த லிங்க்குகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும், ட்விட்டர் பதிவிட்டும் இருந்தனர். இதையடுத்து மத்திய அரசு இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்தது. இந்த ஆவணப்படம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துவதாகவும், இந்தியாவுடனான உலக நாடுகளின் நட்புறவு, பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து ட்விட்டர், யூடியூப் சமூக வலைதள லிங்க்குகளை முடக்க உத்தரவிட்டது.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். ஆவணப்படத்தை முடக்குவதற்கான காரணம் மற்றம் அதில் உள்ள குற்றச்சாட்டை அரசு வெளிப்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த விவகாரத்திற்கு பின் பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சி இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது.

பி.பி.சி உருவான வரலாறு?

1922-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பி.பி.சி நிறுவப்பட்டது. இது முன்பு பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் நிறுவனம் என்று அழைக்கப்படும் ஒரு தனியார் நிறுவனமாக இருந்தது. பிரிட்டிஷைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குகளை வைத்திருக்க
அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் நிறுவனம் வளர்ச்சியடைய போராடியது. 1926 பொது வேலைநிறுத்தத்தின் போது அதன் அதிர்ஷ்டம் திரும்பியது. பேராட்டம் மற்றும் நெருக்கடி பற்றிய பிபிசியின் கவரேஜ் பிரிட்டிஷ் மக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது, இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக அமைந்தது.

அதே ஆண்டின் பிற்பகுதியில் பாராளுமன்றக் குழு பி.பி.சியை பொது நிறுவனமாக மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தது. தனியார் நிறுவனத்திற்குப் பதிலாக கிரவுன்-சார்ட்டர்ட் நிறுவனம் என பிரிட்டிஷ் ஒளிப்பரப்பு கழகத்தால் மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் நிறுவனம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது.

பி.பி.சி எவ்வாறு இயங்குகிறது?

இன்று வரை, பிபிசி ராயல் சாசனத்தின் ( Royal Charter) விதிப்படி செயல்படுகிறது. இது ஆளும் மன்னரால் வழங்கப்படும் முறையாகும். இது இருந்தால் தான் நிறுவனம் உரிமம் பெற முடியும். நாட்டின் உள்துறை செயலாளர் உரிமத்தை வழங்குவார். 10 வருடங்களுக்கு ஒரு முறை சாசனம் புதுப்பிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சாசனம் டிசம்பர் 31, 2027 வரை செயல்படும்.

சாசனம் ஒளிபரப்பு நிறுவனத்தின் நோக்கங்களையும் விளக்குகிறது. பிபிசி "யுனைடெட் கிங்டம் மற்றும் உலக நாடுகளுக்கு அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களின் புரிதலை துல்லியமாக, பாரபட்சமன்றி, உண்மை நிலவரங்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2017 வரை, நிறுவனம் பிபிசி அறக்கட்டளை, அதன் நிர்வாக வாரியம் மற்றும் Ofcam எனப்படும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. 2016-ல் மதிப்பாய்வுக்குப் பிறகு குறைபாடு கண்டறியப்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிறுவனத்தை நிர்வகிக்க பிபிசி வாரியம் அமைக்கப்பட்டபோது, ​​அதை ஒழுங்குபடுத்தும் முழுப் பொறுப்பும் ஆஃப்காம் (Ofcam) ஒழுங்குமுறை ஆணையத்திற்கு
வழங்கப்பட்டது. இந்தக் குழு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறது.

பி.பி.சி-யின் வருவாய்

பிபிசி நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளைப் பெற அல்லது பதிவு செய்வதற்கான உபகரணங்களுடன் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தில் இருந்து நிதியுதவி பெறுகிறது. அதோடு பிபிசி ஸ்டுடியோஸ் மற்றும் பிபிசி ஸ்டுடியோவொர்க்ஸ் ஆகியவற்றிலிருந்தும் வருமானம் பெறுகிறது.

2022-ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தை முடக்குவதாக அறிவித்தபோது நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அது மட்டுமின்றி, 2027-ம் ஆண்டுக்குள் வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து விடுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தி கார்டியன் வெளியிடப்பட்ட அறிக்கையில் , "பிபிசி ஆண்டுக்கு 3.2 பில்லியன் பவுண்டுகள் உரிமக் கட்டண வருவாயைப் பெறும் என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றின் போட்டி காரணமாக அதன் திட்டங்களை உருவாக்குவதற்கான செலவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து அரசாங்கத்துடன் பி.பி.சி-யின் உறவு

முன்பு குறிப்பிட்டது போல், பிபிசி தனது செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் தலையீடு இல்லாமல் நடத்துவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது பலரிடமிருந்து சிக்கல்களை எதிர்கொள்கிறது. பிரச்சினைகளில் முரண்படுகிறது.

பல ஆண்டுகளாக, நிறுவனம் இடதுசாரி சார்பு கொண்டதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறது. பிரதமர் மார்கரெட் தாட்சரின் பதவிக் காலத்தில், அவரது கட்சி உறுப்பினர்கள் பலர் பிபிசி கண்டித்தனர். 2016 தேர்தல் நேரத்தில் "பிரெக்சிட் எதிர்ப்பு" கவரேஜ் செய்ததற்காகவும் இது விமர்சனத்தை எதிர்கொண்டது.

2020- ம் ஆண்டில், டிம் டேவி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாகப் பொறுப்பேற்றபோது, ​​அவர் இந்தச் சிக்கலைச் சமாளிப்பதாக உறுதியளித்தார். மேலும், கருத்து பேசும் ஊழியர்கள் மாற்றப்படும் அல்லது வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment