Advertisment

டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கை எதிர்கொள்வது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

டொனால்ட் டிரம்ப் 2016ம் ஆண்டு தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதை மறைத்ததற்காக குற்றஞ்சாட்டப்படலாம் அல்லது முறையாக குற்றம் சாட்டப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Donald trump arrest, donald trump indicted, டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப் கைது, stormy daniels, can trump be arrested, what is trump stormy daniels case, Tamil indian express, express explaiened

டொனால்ட் டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2016ம் ஆண்டு தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதை மூடிமறைத்த குற்றத்திற்காக நியூயார்க் பெரும் நடுவர் மன்றத்தால் புதன்கிழமையன்று குற்றஞ்சாட்டப்படலாம். ஊடக செய்திகளின்படி, பெரிய நடுவர் மன்றம் பல வாரங்களாக இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை விசாரித்து வருகிறது. முக்கிய சாட்சியான மைக்கேல் கோஹனின் சாட்சியம் உட்பட, டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் இதுவரை அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அவர் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாகக் கூறினார்.

Advertisment

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 18-ம் தேதி தனது ஆதரவாளர்களை போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தார், செவ்வாயன்று கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஊழல் மற்றும் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து சட்டவிரோதமான ஆவணங்கள் கசிவு… எந்த குற்றமும் நிரூபிக்க முடியாத நிலையில்… குடியரசுக் கட்சி வேட்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார்” என்று டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சொசியலில் எழுதினார். அவர் இன்னும் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?

நியூயார்க் சட்டத்தின்படி, குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ளும் நபர், தன் சார்பாக ஆஜராகும்படி ஒரு சாட்சியைக் கோரலாம். அந்த சாட்சியை விசாரிப்பதற்கான இறுதி முடிவு பெரும் நடுவர் மன்றத்திடம் உள்ளது. இந்த நிலையில், ஒருமுறை மைக்கேல் கோஹனின் சட்ட ஆலோசகராக இருந்த ராபர்ட் ஜே. கோஸ்டெல்லோ, டிரம்பின் வழக்கறிஞர்களின் வேண்டுகோளின்படி, திங்கள்கிழமை மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி முன் ஆஜரானார். கோஸ்டெல்லோ, அரசு தரப்பு சாட்சியின் நம்பகத்தன்மையைத் தாக்கும் சாட்சியத்தை அளித்தார். மேலும், “இவர் தலையில் துப்பாக்கியை வைத்தால் உண்மையைச் சொல்ல முடியாது என்று நான் கிராண்ட் ஜூரியிடம் சொன்னேன்” என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டிரம்ப் கைது நடவடிக்கையை எதிர்கொள்வது ஏன்?

டிரம்ப் 2016-ம் ஆண்டு தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதை மறைத்ததற்காக குற்றஞ்சாட்டப்படலாம் அல்லது முறையாக குற்றம் சாட்டப்படலாம். ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்திப்படி, மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், 2006-ல் ட்ரம்ப்புடனான பாலியல் சந்திப்பு குறித்து மௌனமாக இருந்ததற்கு ஈடாக, டேனியல்ஸுக்கு 1,30,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தியதற்கான ஆதாரங்களை மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக் வழங்கினார்.

விசாரணை முடிந்ததும், கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டுகளில் வாக்களிப்பதாக பிபிசி செய்தி கூறுகிறது. ஆனால், முதலில், மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வார். ஒரு கிரிமினல் வழக்கு தொடங்கப்படும் என்றால், ஒரு முன்னாள் அமெரிக்க அதிபருக்கு எதிரான முதல் முறையாக தொடரப்படும் கிரிமினல் வழக்காக இருக்கும். இருப்பினும், கிராண்ட் ஜூரிக்கான அடுத்த நடவடிக்கைகள் தெளிவாக இல்லை.

மேலும், டிரம்ப் மீது நிலுவையில் உள்ள பல வழக்குகளில் நியூயார்க் வழக்கும் ஒன்று. மற்றவை ஜார்ஜியா தேர்தல் வழக்கு விசாரணை, 2021-ல் அமெரிக்க கேபிட்டலை தாக்கியதில் அவரது பங்கு பற்றிய கூட்டு விசாரணைகள் மற்றும் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு ரகசிய ஆவணங்களை வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

*2018 ஆம் ஆண்டில், கோஹன் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகளைத் தொடர்ந்து எஃப்.பி.ஐ-ஆல் கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு, அவர் மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றவியல் வரி ஏய்ப்பு மற்றும் பிரச்சார நிதி மீறல்கள் உட்பட எட்டு வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கோஹனின் வழக்கில் 2018 ஃபெடரல் நீதிமன்றத் தாக்கல் செய்த படி, டிரம்ப் கோஹனுக்கு அமைதியாக இருக்குமாறு பணம் செலுத்தியதன் நோக்கத்தை மறைத்து, அவர்கள் இல்லாத ஒரு சட்டப்பூர்வ தற்காலிக பணியாளர் என்று பொய்யாகக் கூறியது தெரியவந்தது.

தற்போதைய வழக்கில், நியூயார்க் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 175-ன் கீழ் வணிகப் ஆவணங்களை பொய்யாக்கியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்படலாம். கணக்கு வைப்பு மோசடி குற்றத்திற்காக 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், இதை நிரூபிக்க, வழக்கறிஞர்களுக்கு டிரம்ப் தனது துணை அதிகாரிகளை நிறுவனத்தின் பதிவில் "ஏமாற்றும் நோக்கத்துடன்" தவறான பதிவுகளை ஏற்படுத்தியதற்கான ஆதாரம் தேவை. இந்த செயலை ஒரு தவறான செயலாகக் காட்டினாலும், ஒரு குற்றமாக இருப்பதற்கு, இரண்டாவது குற்றத்தை செய்யும், உதவி செய்யும் அல்லது மறைக்கும் நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

டி.ஏ. அலுவலகம் அவருக்கு எதிரான பிரச்சார நிதி மீறல்களை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது குற்றமாக கருதுவதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

*ஃபெடரல் நீதித்துறையின் சிறப்பு ஆலோசகர், ஜாக் ஸ்மித், பதவியை விட்டு வெளியேறிய போதிலும், டிரம்ப் தனது புளோரிடா கிளப் மற்றும் வீட்டில் வைத்திருந்த, "வகைப்படுத்தப்பட்டதாகக் குறிக்கப்பட்ட பல நூறு ஆவணங்கள்" தொடர்பான விஷயங்களை விசாரித்து வருகிறார். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி சிலவற்றை மட்டுமே சமர்ப்பித்து, அவற்றை மாற்றுவதற்கான நீதித்துறையின் முயற்சிகளையும் அவர் எதிர்த்தார். ஆகஸ்ட் 2022 இல், எஃப்.பி.ஐ ஒரு தேடுதல் உத்தரவை பிறப்பித்தது மற்றும் டிரம்பின் வசம் இருந்த மேலும் 103 ஆவணங்களைக் கண்டறிந்தது.

இதற்காக, தேசிய பாதுகாப்பு ஆவணங்களை அனுமதியின்றி வைத்திருந்ததாக டிரம்ப் குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். டிரம்பின் வீட்டில் தேடுவதற்கான எஃப்.பி.ஐ-யின் வாக்குமூலத்தில், உளவுச் சட்டம் சரத்து18-வது பிரிவு 793(இ) அவர் மீதான குற்றச்சாட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத் தகவல்களைச் சேகரித்தல், அனுப்புதல் அல்லது இழப்பது தொடர்பானது. ஒவ்வொரு வகைப்படுத்தப்பட்ட ஆவணத்திற்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, டிரம்ப் ஆவணங்களை வைத்திருந்தார் என்பதையும், அவற்றைத் திருப்பித் தருமாறு கேட்டபோது இணங்கத் தவறிவிட்டார் என்பதையும் அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும், அவை வெளிப்படுத்தப்படுவது அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது வெளிநாட்டு எதிரிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

*ஜனவரி 6, 2021 அன்று கேபிட்டல் தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைப்பு 18-வது பிரிவு 1512 (C) இன் கீழ் அலுவலக ரீதியான நடவடிக்கையைத் தடுக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது இதற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். தலைநகரில் ஏற்பட்ட வன்முறையில் கலந்து கொண்ட 300 கலவரக்காரர்கள் மீதும் இதே சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டிரம்பின் விஷயத்தில், அவர் கலவரத்தில் நேரடியாக பங்கேற்காததால் நிலைமை சிக்கலானது.

இந்த குழு, தலைப்பு 18-வது பிரிவு 2383-ம் குறிப்பிட்டது. இது மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் மற்றும் சட்டங்களுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டுதல், உதவி அல்லது உதவுதல் ஆகியவற்றைக் குற்றமாக்குகிறது, மேலும் கலவரக்காரர்களை மணிக்கணக்கில் நிறுத்த ட்ரம்ப் மறுத்தது இதை உறுதிப்படுத்துகிறது என்று கூறியது.

*ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியின் மாவட்ட வழக்கறிஞர், 2020 ஜார்ஜியா மாநிலத் தேர்தல்கள் தொடர்பான நிகழ்வுகளை விசாரித்து வருகிறார். அங்கே டிரம்ப் ஜனாதிபதி ஜோ பிடனின் வெற்றியை மாற்ற முயன்றார். டிரம்ப் மற்றும் ஜார்ஜியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கர் இடையே கசிந்த தொலைபேசி அழைப்பின் சான்றாக உள்ளது.

2021 ஜார்ஜியா சட்டத்தில், பெரும்பாலான தேர்தல் மீறல்கள் தவறான செயல்களாகக் கருதப்பட்டாலும், ட்ரம்ப் மீது இன்னும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரிவு 21-2-603 உட்பட, தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கு மற்றொரு நபருடன் சதி செய்வது குற்றமாகும். மேலும், பிரிவு 21-2-604, இது மற்றொரு நபரை தேர்தல் மோசடியில் ஈடுபட வைப்பது குற்றமாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment