Advertisment

ஏன் ட்விட்டர் கணக்குகளில் தொடர்ந்து “ஃபாலோவர்கள்” எண்ணிக்கை குறைந்து வருகிறது?

பிரபலமான நடிகர் அல்லது அரசியல்வாதியின் கணக்கைப் போலவே ஒரே காட்சி படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான கணக்குகள் உள்ளன.

author-image
WebDesk
New Update
Twitter handles keep losing followers

 Shruti Dhapola

Advertisment

Why many Twitter handles keep losing followers : பாலிவுட் பிரபலம் அனுப்பம் கேர் உள்ளிட்ட பலரும் சமீபத்தில் தங்களின் ஃபாலோவர்கள் எண்ணிக்கையை இழந்துள்ளனர். சமீப காலமாக சில நூறு துவங்கி ஆயிரக் கணக்கில் ஃபாலோவர்கள் எண்ணிக்கையை பிரபலங்கள் இழந்துள்ளனர். சமூக வலைதளங்களில் அடிக்கடி நடைபெறும் க்ளீன்அப் முறையால் இது போன்று எண்ணிக்கைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் இவ்வாறாக ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ட்விட்டர் நிர்வாகம் கூறியது என்ன?

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அனுப்பிய அறிக்கையில் ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ட்விட்டரில் உரையாடலின் நேர்மையை சிறப்பாகப் பாதுகாக்க, கடவுச்சொல் அல்லது தொலைபேசி எண் போன்ற கணக்கு விவரங்களை சரிபார்க்க அல்லது உறுதிப்படுத்த ட்விட்டர் நிறுவனம் தவறாமல் கணக்குகளை மேற்பார்வையிடுகிறது. கூடுதல் தகவல்களை சரிபார்க்கும் வரையில் இந்த கணக்குகள் “லாக் செய்யப்பட்ட” நிலையில் இருக்கும். எனவே இது ஃபாலோவர்கள் எண்ணிக்கையில் இடம் பெறாது. இது பல பயனர்களுக்கு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ட்விட்டரில் தவறான கையாளுதலை அந்த நிர்வாகம் எப்படி வரையறை செய்கிறது?

மற்றவர்களை தவறாக வழிநடத்தும் மற்றும் / அல்லது அவர்களின் அனுபவத்தை சீர்குலைக்கும் மொத்த, ஆக்கிரமிப்பு அல்லது ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதற்கான எந்தவொரு முயற்சியையும் ”மெனிப்புலேஷன்” என்று ட்விட்டர் வரையறுக்கிறது.

ட்விட்டரில் மெனிப்புலேஷன் பலவகைகளில் நடைபெறுகிறது. போலி கணக்குகளை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழி நடத்தி நிர்வாக கொள்கைகளை மீறுகிறார்கள் என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

தவறான தகவல்களை ட்விட்டரில் வழங்குவதும் மெனிப்புலேஷனின் ஒரு அங்கம் என்று நிர்வாகம் கூறுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களில், மற்றவர்களின் புகைப்படங்கள், ஃப்ரோபைல் பயோக்கள் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட விஷயங்களில் வேண்டுமென்றே பயன்படுத்துதலும் அடங்கும் என்று ட்விட்டர் பாலிசிகள் கூறுகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் இந்த கணக்குகள் தனி நபர்களையோ நிறுவனத்தையோ சாராதவை. இவர்கள் வழங்கும் தகவல்கள் சரிபார்க்கப்படும் வரை “ப்ளாக்” செய்யப்பட்டே இருக்கும். பிரபலமான நடிகர் அல்லது அரசியல்வாதியின் கணக்கைப் போலவே ஒரே காட்சி படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான கணக்குகள் உள்ளன. இத்தகைய கணக்குகள் ட்விட்டரின் ஸ்கேனரின் கீழ் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு நீக்கப்படுகிறது.

செயற்கையாக ஃபாலோவர்களை அதிகரிப்பது குறித்து ட்விட்டர் கூறுவது என்ன?

பிறரை பின் தொடர்வது மற்றும் தங்களின் ஃபாலோவர்களை அதிகரிக்க செயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளது. இந்த வழிமுறைகளில் பின்தொடர்பவர்களை வாங்குவது, ரீட்ட்வீட்கள், லைக்குகள், மென்சன்கள் மற்றும் போல்களில் வாக்குகளை விற்பது போன்றவையும் தடை செய்துள்ளது.

மூன்றாவது பார்ட்டி சேவைகள் மற்றும் செயலிகள் மூலம் இது போன்ற ட்வீட்களில் ஈடுபாடுகளை அதிகரிப்பதும் கூட platform manipulation என்று கூறப்படுகிறது. பின்தொடர்பவர்களின் எந்தவொரு வர்த்தகமும், மற்றும் ட்விட்டர் கணக்குகளும் விதிமுறை மீறல்களாக கருதப்படுகிறது.

தங்களின் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பிறரை அளவுக்கு அதிகமாக பின் தொடர்வதும் கூட இந்த சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவதாக கருதப்படுகிறது. எந்தவொரு குறுகிய காலத்தில் கண்மூடித்தனமான பின்தொடர்தல் , குறிப்பாக தானியங்கி வழிமுறைகளால் தொடர்பில்லாத ஏராளமான கணக்குகளை பின்தொடர்வது விதி மீறலாகும். ஆட்டோமேஷனை பயன்படுத்தி மற்ற நபர்களின் ஃபாலோவர்களை நகலெடுப்பதற்கும் அனுமதி இல்லை.

இது போன்ற செயல்களை ட்விட்டர் எப்படி சரிபார்க்கிறது?

anti-spam நடவடிக்கைகள் மூலம் மெனிப்புலேசன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது ட்விட்டர். இந்த anti-spam நடவடிக்கைகள்ளில், விட்டர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஒரு கணக்கை சந்தேகிக்கும்போது, ​​அது ஒரு தொலைபேசி எண் போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் வரை அல்லது reCAPTCHA ஐ தீர்க்கும் வரை கணக்கை முடக்கும். சமீபத்தில் நிறைய கணக்குகளில் இது நிகழ்ந்திருக்கலாம், மேலும் அவை ட்விட்டரின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் கணக்கு முடங்கியே இருக்கும்.

இது போன்ற விதிமுறை மீறல்களை ட்விட்டர் உறுதி செய்தால் கணக்குகளை முடக்குதல் மற்றும் ட்வீட்களை டெலிட் செய்த போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இயங்குதள கையாளுதல் குற்றங்களும் நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது ட்விட்டர்.

எங்கள் போலி கணக்குக் கொள்கையை மீறுவதாக ஒரு பயனரை நாங்கள் சந்தேகித்தால், கணக்கை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சில அடையாள அட்டை விவரங்களை ட்விட்டர் கணக்கு கோரலாம். தங்களின் கணக்கு தவறாக முடக்கப்பட்டிருப்பதாக நம்பினால் அவர்கள் அடையாள அட்டை விவரங்களை வழங்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment