அமெரிக்க தத்துவஞானி மற்றும் மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி, OpenAI இன் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்போட், ChatGPT “அடிப்படையில் உயர்-தொழில்நுட்ப திருட்டு” மற்றும் “கற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி” என்று சமீபத்திய நேர்காணலில் அவர் தெரிவித்தார். மாணவர்கள் கற்றலைத் தவிர்க்க உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது “கல்வி முறை தோல்வியடைந்து வருவதற்கான அறிகுறி” என்றும் அவர் கூறினார்.
ChatGPT-யின் வளர்ச்சி மற்றும் எதிர்கால கல்வியில் தாக்கம் பற்றியும் அவர் கூறினார். சாம்ஸ்கி EduKitchen என்ற யூடியூப் சேனலுக்கு நேர்காணல் வழங்கும் போது இதை தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மொழியியலாளர் கூறுகையில், கருத்து திருட்டு பல்வேறு வகைகளில் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ChatGPT மிகவும் பிரபலமாகி வருகிறது. “இது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இந்த திருட்டு எளிதானது” என்று கூறினார். ChatGPT போன்ற சாட்போட்கள் கல்வி முறைக்கு பங்களிக்கும் ஒரே வகையான திருட்டு என்று குறிப்பிட்டார்.
பெங்களூரு பல்கலையில் தடை
சாட்போட்டின் வளர்ந்து வரும் பிரபலத்தை ஸ்மார்ட்போன்களின் எழுச்சியுடன் ஒப்பிடுகையில், வகுப்புகள் போதுமான அளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் கற்றலைத் தவிர்க்க உயர் தொழில்நுட்பத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்றார். பல மாணவர்கள் வகுப்புகளிலேயே தங்கள் ஐபோனில் யாரிடமாவது சேட் செய்கிறார்கள். இதை சமாளிக்க ஒரு வழி ஐபோன்களை தடை செய்வது; மற்றொரு வழி வகுப்பை சுவாரஸ்யமாக்குவதாகும் என்றார்.
சாம்ஸ்கி மேலும் கூறுகையில், “மாணவர்களைக் கவரும் வகையில் எதுவும் இல்லை. அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. சவால் விடும் வகையில் எதுவும் இல்லை என்றால், அவர்கள் கற்றலைத் தூண்டவில்லை என்றால், அவர்கள் அதற்கான தாங்களாகவே கண்டுபிடிப்பார்கள்” என்றார்.
நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, ChatGPT தீவிர விவாதங்களுக்கு உட்பட்டது, குறிப்பாக கல்வித்துறை வட்டாரங்களில் இது பேசுபொருளானது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடம், அசைன்மெண்ட் மற்றும் கட்டுரைகளை எழுத OpenAI நிறுவனம் உருவாக்கிய சாட்போட்டைப் பயன்படுத்துகின்றனர் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனவே, சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சியாட்டில் உள்ள பொதுப் பள்ளிகளில் ChatGPT பயன்பாட்டை ப்ளாக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகமான சயின்ஸ் போவும் இதனை பயன்படுத்த கடும் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கூட, ChatGPT கல்வி நிறுவன வட்டாரங்களில் கவலை அளிக்கிறது. கடந்த வாரம், பெங்களூரு ஆர்.வி பல்கலைக்கழகம் சாட்போட் பயன்பாட்டை தடை செய்தது.
இருப்பினும், இது தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் விவாதிப்பார்கள். Euronews இன் அறிக்கையின்படி, மாணவர்களின் பள்ளி சாதனங்களில் தான் ChatGPT தடை செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு வழிகளிலும் இதை பயன்படுத்தலாம் என்பதால் இந்த தடை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சந்தேகம் எழுகிறது. மேலும் வளர்ந்து வரக் கூடிய எதிர்கால டிஜிட்டல் கருவியை தடை செய்வது பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறிகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/