Advertisment

இலங்கை முன்மொழிந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன்?

இலங்கை முன்மொழிந்துள்ள கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, பயங்கரவாத சந்தேக நபர்களைக் காவலில் வைப்பதில், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வெச்சுவலாக விருப்பம் போல செயல்படுவதற்கு சுதந்திரம் அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
Sri Lanka, Sri Lanka anti-terror law, Sri Lanka politics, இலங்கை அரசியல், இலங்கை முன்மொழிந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன், Sri Lanka anti-terror law criticism, what is Srilanka anti-terror law, express explained, indian express

இலங்கை முன்மொழிந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன்?

இலங்கை முன்மொழிந்துள்ள கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, பயங்கரவாத சந்தேக நபர்களைக் காவலில் வைப்பதில், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வெச்சுவலாக விருப்பம் போல செயல்படுவதற்கு சுதந்திரம் அளிக்கிறது.

Advertisment

இலங்கையில் உள்ள வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் மதத்தலைவர் என பலரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வடிவத்தை (ஏ.டி.பி) நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதுடன், சட்ட வரைவின் விதிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை கோரியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை, நோயை விட மோசமான சிகிச்சை” என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை முன்மொழிந்துள்ள இந்த சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாத சந்தேக நபர்களைக் காவலில் வைப்பதில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு காவலில் வைப்பதில், பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வெச்சுவலாக விருப்பம் போல செயல்படுவதற்கு சுதந்திரம் அளிக்கிறது. முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போரின் போது, இந்த சட்டம் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த சட்டம் மூலம்,1980-கள், 1990-கள் மற்றும் 2000-களில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் காணாமல் போனோர்கள். இறப்புகளுக்கும் வழிவகுத்தது. இந்த 1978-ம் ஆண்டு சட்டத்தை நீக்குமாறு இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட பல சர்வதேச அழுத்தங்கள் உள்ளன.

இருப்பினும், ஏ.டி.பி-யில் உள்ள எதுவும் தற்போதுள்ள சட்டத்தை விட நியாயமானதாகவோ அல்லது ஜனநாயகமாகவோ இருக்கும் என்று கூறவில்லை. எதிர்ப்பையும் போராட்டத்தையும் அடக்குவதற்கான ஒரு கருவியாக இருக்கும் என்று இது பரவலாக விமர்சிக்கப்பட்டது. மாற்றுக் கொள்கைகளுக்கான கொழும்பு சிந்தனை மையத்தின் (சி.பி.ஏ) கருத்துப்படி, இந்த சட்ட வடிவத்தில், ஒரேயொரு மீட்பு அம்சம் மட்டுமே உள்ளது: போலீசாரின் முன்னிலையில் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக முன்வைக்க முடியாது, இது தற்போதுள்ள சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முன்மொழிந்த சட்டம்

இலங்கையின் அரசிதழியில் மார்ச் 22-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த சட்டத்தின் வரைவு மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், பயங்கரவாதச் செயலுக்கான அதன் வரையறை துல்லியமாக இல்லை என்றும் மற்ற தேசிய சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரக்கூடிய குற்றங்களை உள்ளடக்கியதன் மூலம் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதன் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது.

முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் கீழ், பொதுமக்களை அச்சுறுத்துவது, குறிப்பிட்ட வழியில் செயல்படவோ அல்லது செயல்படவோ கூடாது என்று அரசாங்கத்தை தவறாக நிர்பந்திப்பது, அரசாங்கத்தை செயல்பட விடாமல் தடுப்பது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது அல்லது அதன் இறையாண்மையை மீறுவது, போர் அல்லது வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டுவது ஆகியவை பயங்கரவாத செயல்களாகும்.

இந்த வரையறையானது, பயங்கரவாதச் செயல் என்ற சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்கவில்லை என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிமக்கள் இதழியல் வலைத்தளமான கிரவுண்ட் வியூஸில் உள்ள மசோதா குறித்து, சத்குணநாதன் ஒரு பகுப்பாய்வில் எழுதுகையில், “பயங்கரவாதத்தின் வரையறை துல்லியமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது அவசியம், விகிதாசாரம் மற்றும் சட்டபூர்வமான கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்… பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் உள்ள வரையறை விரிவானது, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல்கள் போன்ற வரையறுக்கப்படாத கூறுகளைக் கொண்டுள்ளது. இலங்கையின் இறையாண்மையை மீறுதல் அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாடு'… வரலாற்று ரீதியாக, கூட்டாட்சி போன்ற சில அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்காக வாதிடுவது கூட, இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்பட்டு முத்திரை குத்தப்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மசோதா வெறுப்புப் பேச்சை சாதாரண கிரிமினல் குற்றத்திலிருந்து பயங்கரவாதப் பிரிவிற்கு மாற்றியுள்ளது.

நிர்வாக அதிகாரங்கள்

முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் அல்லது சட்டவிரோதமான முறையில் செயல்படுவார்கள் எனில், நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அல்லது அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அமைப்புகளைத் தடை செய்யலாம். இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாதகமானது. தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களை சேர்க்கவோ நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்தவோ முடியாது. இந்த தடையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில் தனக்கு முன்பு இலங்கை பிரதமராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை கல்லி முகத்திடலில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கோரி போராட்டம் நடத்தியவர்களைக் கேட்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் பதவிக்கு வந்ததும் அதே போராட்டக்காரர்களுக்கு எதிராகத் திரும்பியதாக விமர்சிக்கப்பட்டார்.

எதிர்ப்பு இயக்கம் என்று அழைக்கப்படும் ஆர்கலயாவை அமைதிப்படுத்துவதும், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு சுமையின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களை சட்டவிரோதமாக்குவதும் இந்த சட்ட வரைவை வழிநடத்தும் கருத்தாகும் என்று விமர்சகர்கள் நம்புகின்றனர். எந்தவொரு பொது இடத்தையும் காலவரையற்ற காலத்திற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க ஜனாதிபதி அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளை சி.பி.ஏ சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் நியாயமான கருத்து வேறுபாடுகளை குறிவைக்க இது பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்புகளை பலவீனப்படுத்துதல், இதற்கு இனி பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் தேவைப்படாது. மேலும், டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரியால் உத்தரவிடப்படலாம்.

இராணுவத்திற்கு அதிகாரங்கள்

குற்றங்களைச் செய்யாமல் தடுப்பது உட்பட ஆயுதப் படைகளுக்கு பெரிய அளவில் சட்ட அமலாக்க அதிகாரங்களை ஏ.டி.பி வழங்குவதையும் சத்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். “உதாரணமாக, ஒரு நபரை (ஒரு நபர்) குற்றம் செய்துள்ளார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் ராணுவ அதிகாரிக்கு உண்டு… இது பரவலாக விளக்கப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் மக்களைக் கைது செய்யப் பயன்படுகிறது. ” என்று எழுதியிருக்கிறார்.

இந்த புதிய சட்டத்தில் ராணுவத்தின் முன்மொழியப்பட்ட ஈடுபாடு, காவல்துறையில் சிறந்த கொள்கைகளுக்கு முரணானது, சட்ட அமலாக்கத்தை மேலும் ராணுவமயமாக்குகிறது, இது நடைமுறை அவசர நிலையை உருவாக்குகிறது… ராணுவம் சட்ட அமலாக்கத்தில் பயிற்றுவிக்கப்படவில்லை, கடைசி முயற்சியாக இல்லாமல் வன்முறையை முதல் பதிலாக பயன்படுத்துகிறது. வரலாற்று ரீதியாக கடுமையான மனித உரிமை மீறல்களை செய்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் எழுதியுள்ளார்.

பரவலான விமர்சனம்

தனிநபர் சுதந்திரத்தை குறைக்கும், சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் இந்த சட்டத்திற்கு இடமில்லை என்று கூறி, சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாம் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (பி.ஏ.எஸ்.எல்) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், முன்மொழியப்பட்ட இந்த சட்டம், அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும், இந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment