Advertisment

தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய முகம்மது அலி: என்ன நடந்தது அன்று?

அமெரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக தான் வென்ற தங்கப் பதக்கத்தை முகம்மது அலி ஓகியோ ஆற்றில் வீசினார்.

author-image
WebDesk
New Update
Wrestlers protest at banks of Ganga When Muhammad Ali threw his gold medal into the river to protest racism

பாரதிய ஜனதா எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் தலைசிறந்த வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

இவர்களை போலீசார் கைது செய்த சில நாள்களுக்கு பின்னர் தாங்கள் நாட்டுக்காக வெற்றிப் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக செவ்வாய்க்கிழமை (மே 30) அறிவித்தனர்.

Advertisment

இது தொடர்பாக விக்னேஷ் போகத் இந்தியில் வெளியிட்ட அறிக்கையில், “இனி எங்களுக்கு இந்தப் பதக்கங்கள் வேண்டாம். அரசு எங்களை முகமூடியாய் பயன்படுத்துகிறது. சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத்தால் சிறையில் அடைக்க நினைக்கிறது.

ஆகவே இந்தப் பதக்கங்களை கங்கையில் வீசுவோம். ஏனெனில் அன்னை கங்கை தூய்மையானவள் என்பதை நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மேலும் நாங்கள் இந்தப் பதக்கங்களை வெல்ல கடுமையாக உழைத்தோம் என்றதையும் தெரிவித்திருந்தார். இவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோருகின்றனர்.

இதேபோல் ஓர் சம்பவம் பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலிக்கும் நடந்துள்ளது. இனவெறி அடக்கு முறைக்கு எதிராக அவர் தான் வென்ற பதக்கங்களை ஓகியோ ஆற்றில் வீசினார்.

முகம்மது அலியின் இயற்பெயர் காசியஸ் க்ளே ஆகும். இவர் 12 வயதில் இருந்து பாக்ஸிங்கில் ஈடுபட்டுவருகிறார். அவர் பிறந்த பகுதி இனவெறி ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.

இந்நிலையில் தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஆற்றில் எரிந்தது குறித்து முகம்மது அலி தனது "தி கிரேட்டஸ்ட்" என்ற சுயசரிதையில்,

ஓர் வெள்ளைக் கார அதிகாரியுடன் சண்டையிட்ட பின்பு இதை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸில், “ஒலிம்பிக் நிகர் பதக்கத்தை வென்ற பிறகும் அவருக்கு உணவகத்தில் சேவை மறுக்கப்பட்டது. அத்தகைய நிராகரிப்புக்கு பின்னர்தான் அவர் தனது பதக்கத்தை ஓகியோ ஆற்றில் வீசினார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை என்னவென்றால், அலி தனது வாழ்நாள் முழுவதும் மிகவும் சமமான மற்றும் நியாயமான உலகத்திற்காக உழைத்தார். 1964 ஆம் ஆண்டில், அவர் காசியஸ் க்ளே பற்றிய தனது அடையாளத்தை கைவிட்டார், இஸ்லாத்தை தழுவி தன்னை முகமது அலி என்று அழைத்தார்.

மேலும் முகம்மது அலி வியட்நாம் போரிலும் ஈடுபட மறுத்துவிட்டார். அதற்காக பல தடைகளை சந்தித்தார். பின்னாள்களில் முகம்மது அலி மிகப்பெரிய வெற்றிகளை குத்துச் சண்டை போட்டிகளில் குவித்தார்.

உலகெங்கிலும் மிகுந்த மரியாதையான விளையாட்டு வீரர் என்ற அங்கீகாரத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment