எல்லா வகையான பருப்பு சேர்த்து செய்வதால் இந்த தோசையில் ஆரோக்கியம் அதிகம். தவறாம சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு- 1 கப்
துவரம் பருப்பு- 1கப்
உளுந்தம் பருப்பு- ½
கடலைப் பருப்பு-1கப்
மைசூர் பருப்பு- ¼ கப்
கம்பு- 1 கப்
கேழ்வரகு- 1 கப்
பச்சரிசி- 1 கப்
ஜவ்வரிசி- ¼ கப்
செய்முறை :
பச்சை பயிறு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு , மைசூர் பருப்பு, ,கம்பு, கேழ்வரகு, பச்சரிசி, ஜவ்வரிசி ஆகியவற்றை நன்றாக கழுவி, அத்துடன் 6 வர மிளகாய் சேர்த்து ஊற வைக்க வேண்டும். கிட்டதட்ட 4 மணி நேரம் ஊறியதும். 5 பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து மெது, மெதுவாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இந்நிலையில் இந்த மாவை தொடர்ந்து புளிக்க வைக்க வேண்டும். வேண்டும் என்றால் தயிர் ஊற்றிக்கொள்ளலாம். இப்போது தோசை ஊற்றி சாப்பிடுங்க.