அடேங்கப்பா... விராட் கோலியின் ரெஸ்டாரண்டில் ஒரு சிக்கன் பிரியாணி விலை இம்புட்டா?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டலில் விற்பனையாகும் பிரியாணி ஒன்றில் விலை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டலில் விற்பனையாகும் பிரியாணி ஒன்றில் விலை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
virat kohli

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரும், உலகப் புகழ்பெற்ற பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவருமான விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமல்லாது விளம்பரங்கள் மற்றும் முதலீடுகள் மூலமாகவும் பெரும் வருமானம் ஈட்டி வருகிறார். இவர் மும்பையில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் சொந்தமாக ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார்.

Advertisment

இந்த உணவகம் 2022 ஆம் ஆண்டில் மும்பையின் பிரபலமான ஜூஹு பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்திற்காக, பிரபல பாடகர் கிஷோர் குமாருக்குச் சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி, அதனைப் புதுப்பித்து வடிவமைத்துள்ளார். 'ஒன் 8 கம்யூன்' உணவகத்தின் மெனுவில் பலதரப்பட்ட உணவுகள் இடம் பெற்றுள்ளன. அசைவம் மற்றும் கடல் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தாவர அடிப்படையிலான (Plant-based) உணவுகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் விலைப்பட்டியல் சற்று அதிகமாக இருப்பதாகக் கருத்து நிலவுகிறது.

அதில் சிக்கன் பிரியாணி ஒன்றில் விலை ரூ.976, சாதாரண சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ. 118, உயர்தர அசைவ உணவு ரூ.2,318 வரை விற்பனையாகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியின் உணவுப் பழக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 'விராட் ஃபேவரைட்ஸ்'  என்ற பெயரில் ஒரு தனிப் பிரிவும் இந்த மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக உணவு வகைகளும் இங்கு ரூ.518 முதல் ரூ.818 வரை விற்பனை செய்யப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில், அனைத்து வகையான உணவுப் பிரியர்களையும் கவரும் வகையில் இந்த உணவகம் இருந்தாலும், இதன் விலைகள் சற்று உயர்வாக இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.

Advertisment
Advertisements
Briyani Virat Kholi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: