scorecardresearch

தினமும் 2 கப்-க்கு அதிகமாக காப்பி, டீ குடிக்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து இருக்கு

நமது உடல் பயிற்சி முறை, துங்கும் முறை, மற்றும் உணவு முறை தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது. இதனால் நாம் காப்பைன் (caffeine ) நல்லதா என்ற கேள்வி வரும்.

தினமும் 2 கப்-க்கு அதிகமாக காப்பி, டீ குடிக்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து இருக்கு

நமது உடல் பயிற்சி முறை,  துங்கும் முறை,  மற்றும் உணவு முறை தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது. இதனால் நாம் காப்பைன் (caffeine ) நல்லதா என்ற கேள்வி வரும். காப்பைன் ஒரு தூண்டுதலாக செயல்படும். நாம் குடிக்கும் காப்பி, டீ, கொக்கக்கோலா ஆகியவற்றில் இருக்கிறது. காப்பைன் கொலஸ்ட்ராலை பாதிக்குமா என்ற கேள்வி கேட்பதற்கு முன்பு கொலஸ்ட்ரால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா மனித செல்களிலும்  வழவழப்பாக இருக்கும்  ஒன்றுதான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால்தான் ஈஸ்டோஜன் மற்றும் டெஸ்ட்டோ ஸ்டீரோன், வைட்டமின் டி ஆகியவற்றை உருவாக உதவுகிறது. மேலும் உணவை ஜீரணம் செய்யவும் உதவுகிறது.

இதனால் கொலஸ்ட்ரால் என்ற நோய் ஏற்பட காரணம், எல்.டி.எல் அளவு அதிகரிப்பதே ஆகும்.

நேரடியாக காப்பைன் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. ஆனால் அது உருவாக்கும் விளைவுகளால் மறைமுகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். காப்பைன் அழுத்தத்தை உருவாக்கும். இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.  மேலும் இன்சுலின் அளவை  அதிகரிக்கும். இதனால் எல்.டி.எல் அளவு அதிகரிக்கலாம். 

காப்பி எண்ணெய் என்பது காப்பைன் உள்ள காப்பிலும் மற்றும் காப்பைன் இல்லாத பானங்களில் இருக்கும். இது நமது உடலின் இயக்கத்தையும், கொல்ஸ்ட்ராலை சீர்படுத்தும் செயல்முறையை பாதிக்கும். இதனால் கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கலாம்.

நடைபெற்ற ஆய்வில், 5 கப் காப்பி தினமும் குடித்தால், இதை ஒரு வாரம் வரை நீட்டித்தால், 6 முதல் 8 சதவிகிதம் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Can caffeine increase cholesterol level in the body

Best of Express