/indian-express-tamil/media/media_files/2025/05/03/mtahYn0c0SE2EaC3cvIi.jpg)
Sundari akka Meen kadai
சென்னை என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது பரந்து விரிந்த மெரினா கடற்கரைதான். அந்த மெரினாவில், எம்.ஜி.ஆர். நினைவிடப் பகுதியில் ஒரு மதிய வேளையில் நீங்கள் நடந்து சென்றால், மற்ற கடைகளைவிட ஒரு குறிப்பிட்ட உணவுக் கடையில் மட்டும் அசாதாரணமான கூட்டம் இருப்பதை நிச்சயம் கவனிக்கலாம். அங்கே, ஆட்டோ ஓட்டுநர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் எனப் பலதரப்பட்டோரும், வெளியூர் பயணிகளும் கூட, சுடச்சுட உணவுத் தட்டுகளைப் பெறுவதற்காக டோக்கன் வழங்கும் இடத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்க்கலாம்.
இதுதான் புகழ்பெற்ற 'சுந்தரி அக்கா' மீன்கடை!
கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, 'சுந்தரி அக்கா' மீன் கடை தினமும் பத்துக்கும் மேற்பட்ட விதவிதமான அசைவ உணவுகளுடன், சுவையான மற்றும் காரசாரமான கடல் உணவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இங்கு வந்து ஒருமுறை சுவைத்தவர்கள் கூட, சுந்தரி அக்காவின் கைமணத்தில் அப்படி என்னதான் மாயம் இருக்கிறதோ என்று வியக்காமல் இருக்க மாட்டார்கள்.
அந்த ரகசியத்தை சுந்தரி அக்காவே இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
சுந்தரி அக்காவின் ஸ்பெஷல் மீன் குழம்பு செய்முறை:
முதலில், வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், நறுக்கிய பூண்டு, வடகம், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
அதன்பின், புளிக்கரைசலையும், மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். கூடவே, நறுக்கிய கத்திரிக்காயையும் சேர்த்து வேக விடவும். மீன் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்
"முக்கியமாக, நான் சேர்க்கும் ஸ்பெஷல் மசாலா என்ன தெரியுமா? அது என் அன்புதான்!" என்று கூறுகிறார் சுந்தரி அக்கா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.