சியா விதைகள் உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. சியா விதைகளை, சைவ முட்டையுடன் அவித்து சாப்பிட பயன்படுத்துவார்கள். மேலும் சாலட்டுகளில் சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் சிலர் சியா விதைகளை தண்ணீருடன் சேர்த்து குடிப்பார்கள். சியா விதைகளை தண்ணீரில் சேருக்கும்போது அது பெரிதாகிவிடும். தண்ணீர் சிறிது மாற்றம் அடைந்து இருக்கும்.
இதில் இருக்கும் சத்துக்கள் அதிகம். நார்சத்து, புரோட்டின், ஆண்டி ஆக்ஸிடண்ட், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் பி. ஆகியவை
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் வீக்கத்தை குறைக்கும்.
இதில் இருக்கும் ஒமேகா -3 பேட்டி ஆசிட் இதயத்திற்கு நன்மை தருகிறது. மேலும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆரோக்கியமான தோல் உருவாக உதவுகிறது. மேலும் இவை தோல் எரிச்சலை தடுக்கும்.
சியா விதை தண்ணீர் தயாரிப்பது
1-2 டேபிள் ஸ்பூன் (12-24 கிராம்). ஒரு கப் தண்ணீரில் கந்துகொள்ளுங்கள். 2 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். அதிக நேரம் இருக்காவிட்டால் எல்லா தண்ணீரையும் சியா விதைகள் உருஞ்சிவிடும். தற்போது இந்த தண்ணீரை குடிக்கலாம்.