/indian-express-tamil/media/media_files/2025/07/20/tomato-pickle-2025-07-20-22-23-57.jpg)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்ல முடியாமல் வெளிநாட்டிலோ, ஹாஸ்டலிலோ, அல்லது தொலைதூரத்திலோ இருப்பவர்களுக்காக ஒரு டிஷ் எப்படி செய்வது சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்தச் சூழ்நிலையில், நம் வீட்டின் சுவையான, பாரம்பரிய சமையலை நாம் நிச்சயம் மிஸ் பண்ணுவோம். கவலையை விடுங்கள், உங்கள் வீட்டுச் சமையல் சுவையை அப்படியே நினைவுபடுத்தும் ஒரு அருமையான சைடிஷ் இந்தச் சின்ன வெங்காய ஊறுகாய்.
இந்த ரெசிபி மிகவும் எளிமையானது, மேலும் முறையாகச் செய்தால் நாள்பட கெடாமல், உங்கள் வீட்டுச் சுவையை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க உதவும். இது சாதாரண தயிர் சாதம் மற்றும் இட்லி-தோசைக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். மேலும், ரசம் சாதம், சாம்பார் சாதம் என அத்தனைக்கும் இது ஒரு சுவையான துணையாக இருக்கும். நீங்கள் இதைச் சமைத்து ஒரு முறை எடுத்துச் சென்றால், சுமார் மூன்று மாதங்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். எனவே, இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டிலிருந்து விலகி இருந்தாலும், இந்த ஊறுகாய்ச் சுவை உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
புளி
காய்ந்த மிளகாய்
நல்லெண்ணெய்
வெந்தயம்
கடுகு
மல்லி
சீரகம்
உப்பு
வெல்லம்
நல்லெண்ணெய்
உளுந்து
கடலைப்பருப்பு
கடுகு
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் வெந்தயம், கடுகு, மல்லி, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.அடுத்து, உரித்து வைத்த சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். ஒரு லெமன் சைஸ் புளியையும் இதனுடன் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி போல நிறம் மாறும் வரை வதக்கி ஆறவிடவும்.ஆறிய பிறகு, இந்த கலவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல், கொரகொரப்பாக (முக்கால் பதம்) அரைத்தெடுக்கவும். மிக்ஸியில் அரைக்கும் போது "பல்ஸ் மோட்" பயன்படுத்துவது சிறந்தது.
மீண்டும் அதே கடாயில், ஊறுகாய்க்குத் தேவையான தாராளமான நல்லெண்ணெயைச் சேர்த்து நன்கு சூடாக்கவும். எண்ணெய் அதிகம் இருந்தால் தான் ஊறுகாய் கெடாது.எண்ணெய் சூடானதும், உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்த பிறகு, அரைத்து வைத்த வெங்காய விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது உப்பு மற்றும் சுவையைச் சமன் செய்ய கொஞ்சமாக வெல்லத்தையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுப்பை முற்றிலும் குறைந்த தீயில் வைத்து, இந்தக் கலவையை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் முழுவதுமாகப் பிரிந்து, கலவை இறுகி, அல்வா போல கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை (சுண்ட வரும் வரை) கிளறவும். இந்தப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து, ஊறுகாயை நன்கு ஆற வைத்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். உங்களுக்காகவே செய்யப்பட்ட இந்த வீட்டுச் சுவை கொண்ட சின்ன வெங்காய ஊறுகாயை, இந்தத் தீபாவளிக்கு நிச்சயம் செய்து மகிழுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.