/indian-express-tamil/media/media_files/2025/05/24/2UZAAcLFz1jcySPfaUA2.jpg)
முறுக்கு என்றாலே பலருக்குத் தேன்குழல் முறுக்கு அல்லது வெண்ணெய் முறுக்குதான் நினைவுக்கு வரும். ஆனால், ஒருமுறை இந்தச் சின்ன வெங்காய முறுக்கை சுட்டுப் பாருங்கள். மொறுமொறுப்பான முறுக்குடன், வெங்காயத்தின் சுவையும் மணமும் சேர்ந்து, ஒரு வடை சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். இது பண்டிகை காலங்களுக்கும், மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்ற ஒரு தனித்துவமான சமையல் முறை. சாதாரண முறுக்கை விட அதிக சுவை கொண்ட இந்த வெங்காய முறுக்கை எப்படி செய்வது என்று ட்ரடிஷனலி மாடர்ன் ஃபுட் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு
வறுத்த உளுத்தம் மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 15 - 20
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் அல்லது ஓமம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம்/பொட்டுக்கடலை மாவு, சீரகம், பெருங்காயத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மென்மையாக உள்ள வெண்ணெயைச் சேர்த்து, மாவுடன் நன்கு தேய்த்துக் கலக்கவும். மாவு மணல் போல உதிரியாக இருக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மாவை மென்மையாகவும், வெடிப்பு இல்லாமலும் பிசைந்து கொள்ளவும். மாவு சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக இருக்க வேண்டும். (பிசைந்த மாவை ஈரத்துணியால் மூடி வைக்கவும்). அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்குத் தேவையான எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். முறுக்கு பிழியும் அச்சில் (முறுக்கு குழல்) நட்சத்திர வடிவ அச்சை பொருத்தவும்.
பிசைந்த மாவில் ஒரு பகுதியை அச்சில் நிரப்பவும்.ஒரு கரண்டியின் பின்புறத்தில் அல்லது நேரடியாகச் சூடான எண்ணெயில் முறுக்கை வட்ட வடிவில் பிழியவும். அதிக முறுக்குகளை ஒரே நேரத்தில் போட வேண்டாம்.முறுக்கின் சத்தம் அடங்கி, நிறம் பொன்னிறமாக மாறியதும் (சுமார் 3-4 நிமிடங்கள் ஆகும்), முறுக்கை எடுத்து எண்ணெய் வடிக்கும் தாளில் வைக்கவும்.இப்போது வெங்காயத்தின் சுவைக்குச் சமமான, மொறுமொறுப்பான முறுக்கு தயார். இது காற்றுப் புகாத டப்பாவில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.