/indian-express-tamil/media/media_files/2025/07/13/vadai-2025-07-13-13-31-27.jpg)
சமைத்த முட்டைகளை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்களுக்காகவே இந்த சுவை மிகுந்த முட்டை வடை ரெசிபி அறிமுகப்படுத்தப்படுகிறது. முட்டை பஜ்ஜி அல்லது வேறு வகையான ஸ்நாக்ஸ்களை விட, இந்த முட்டை வடை மிகவும் எளிதாகவும், குறைந்த நேரத்திலும் செய்யக்கூடிய ஒரு அசத்தலான பலகாரம் ஆகும். நீங்கள் ஒரு ஸ்நாக்ஸ் பிரியராக இருந்தால், இந்த ரெசிபியைச் சேமித்து வைத்து, ஒரு முறை கட்டாயம் முயற்சி செய்து பார்க்க வேண்டும். இது பண்டிகை நாட்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று சவுத் இந்தியன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை: 3 அவித்த முட்டைகள்
வெங்காயம்: குட்டியாக நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய்: நறுக்கிய பச்சை மிளகாய்
மசாலாப் பொருட்கள்: மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு
மைதா மாவு
எண்ணெய்
செய்முறை:
இந்த சூப்பர் டேஸ்டி முட்டை வடையை எளிதாக எப்படிச் செய்வது என்று பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் (பவுலில்), அவித்து வைத்திருக்கும் 3 முட்டைகளைப் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். இந்தக் கலவை பிடித்து வருவதற்கு (பிணைப்பிற்கு) ஒரு ஸ்பூன் மைதா மாவையும் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
கையை தண்ணீரில் லேசாக நனைத்துக்கொண்டு, பிசைந்த முட்டை கலவையை ஒரு சிறிய உருண்டையாக உருட்டி, அதனை வடை போலத் தட்டையாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, தட்டி வைத்த முட்டை வடைகளை மெதுவாகப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். சுவையான மற்றும் சூடான, எளிமையான முட்டை வடை இப்போது ரெடி, இதை நீங்கள் ட்ரை செய்து பார்த்து இந்த தீபாவளியை கொண்டாடுங்கள். இனி எப்போதும் முட்டை போண்டா செய்யாமல் இனி இந்த வடையை செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.