யூரிக் ஆசிட் இருக்கா? அப்ப இந்த உணவுகளை கனவில் கூட நினைத்துப் பார்க்காதீங்க: எச்சரிக்கும் டாக்டர் கார்த்திகேயன்

உடலில் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள் முதல் அவற்றை கட்டுப்படுத்தும் சில உணவுகள் ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார்.

உடலில் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள் முதல் அவற்றை கட்டுப்படுத்தும் சில உணவுகள் ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
uric acid

யூரிக் அமிலத்தின் (Uric Acid) அளவு உடலில் அதிகரிக்கும்போது அது மூட்டு வலி (கௌட் - Gout), சிறுநீரகக் கற்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகக் குறைப்பதற்கான உணவு முறைகளைப் பற்றி, டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisment

யூரிக் அமிலத்தின் முக்கிய மூலப்பொருளான பியூரினை (Purine) அதிகமாகக் கொண்ட உணவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

அசைவ உணவுகள்: அசைவ உணவுகளான இறைச்சிகள் அதிலும் குறிப்பாக கல்லீரல், மூளை போன்ற உறுப்பு இறைச்சிகளில் பியூரின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவற்றைத் தவிர்ப்பது அவசியம். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியையும் தவிர்ப்பது நல்லது. நண்டு, இறால், மத்தி போன்ற கடல் உணவுகளில் பியூரின் அளவு அதிகம் என்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்: குறிப்பாக பியர் மற்றும் ஆல்கஹால் நிறைந்த பானங்கள், யூரிக் அமிலத்தின் அளவை மிக வேகமாக அதிகரிக்கும். இவற்றை முழுவதுமாகத் தவிர்ப்பது சிறந்தது.

Advertisment
Advertisements

பழச்சாறு மற்றும் சர்க்கரை பானங்கள்: ஃபிரக்டோஸ் போன்ற இனிப்புகள் நிறைந்த மென்பானங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட கேக்குகள், பிரட் போன்ற உணவுகள் யூரிக் அமில அளவை உயர்த்தும். அதேபோல பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், நொறுக்குத் தீனிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்கள் பற்றி டாக்டர் கார்த்திகேயன் குறிப்பிடும்போது, அவற்றில் புரதம் உள்ளது என்றாலும், அவற்றைத் தவிர்ப்பதற்கான அவசியமில்லை என்று கூறுகிறார். வலி நிவாரணிகள் மற்றும் சில இரத்த அழுத்த மருந்துகள் போன்ற குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என டாக்டர் எச்சரிக்கிறார்.

யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைக்க, அவர் பரிந்துரைக்கும் முக்கிய உணவு முறைகள்: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். இது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவும். கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காபியானது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods that can reduce uric acid levels Causes of high uric acid levels in your body

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: