விறைப்புத்தன்மை சுத்தமாக இல்லை? சிக்கன், மட்டன் சாப்பிடலாமா? டாக்டர் நித்யா 'நச்' பதில்
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை பிரச்சனையை குணப்படுத்த என்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா விளக்கமாக தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை பிரச்சனையை குணப்படுத்த என்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா விளக்கமாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கும் ஆண்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், சிக்கன் அல்லது மட்டன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதற்கான பதிலை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
அதன்படி, ஒவ்வொருவரது உடல் எடைக்கும் ஏற்றார் போன்று சிக்கன் மற்றும் மட்டன் போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். குறிப்பாக, புரதம் மட்டுமின்றி கால்சியம் போன்ற சத்துகளும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
இது தவிர உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஏனெனில், உடல் உஷ்ணம் குறைவாக இருந்தால் மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் சரியாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். அதனால், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். இதேபோல், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். இது போன்ற அனைத்து உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை தொடர்ந்து பின்பற்றும் போது விறைப்புத் தன்மை பிரச்சனை குணமடையும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.