வயாகரா மாத்திரையை தூக்கிப் போடுங்க... குதிரை பலம் இத சேருங்க: டாக்டர் நித்யா

ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்கு வயாகரா மாத்திரை தேவையில்லை அதற்கு பதிலாக குதிரை பலம் தரும் ஒரு மூலிகை உள்ளதாக டாக்டர் நித்யா கூறுகிறார்.

ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்கு வயாகரா மாத்திரை தேவையில்லை அதற்கு பதிலாக குதிரை பலம் தரும் ஒரு மூலிகை உள்ளதாக டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Nithya tips

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பாலியல் உறவுக்கு சிலர் வயகரா போன்ற மாத்திரிகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் நிறைய பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். இதற்கு ஆரோக்கியமான சில உணவு பழக்கவழக்கங்கள் உதவும் என்று டாக்டர் நித்யா மைல்ஸ் ஸ்டோன் மீடியா யூடியூப் பக்கத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்கு அஸ்வகந்தா உதவுவதாக அவர் கூறினார். இது வெறும் பாலியல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. 

Advertisment

அஸ்வம் என்றால் குதிரை, கந்தம் என்றால் கிழங்கு. அதாவது குதிரையின் பலம் தரும் கிழங்கு என்று பொருள். தமிழில் இதை அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கின்றனர். இது ஒரு சிறந்த நரம்பு டாானிக் என்றும் டாக்டர் நித்யா கூறுகிறார். அஸ்வகந்தா புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் உள்ள நரம்புகளை பலப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தூக்கத்தை தூண்ட அஸ்வகந்தா உதவுகிறது. விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விந்தணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு அஸ்வகந்தா ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது என்று டாக்டர் நித்யா கூறுகிறார். மேலும் இது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

அஸ்வகந்தாவை பயன்படுத்தும் முறை:  பொதுவாக அஸ்வகந்தா கிழங்கை பொடியாக அரைத்து கடைகளில் வாங்கலாம். ஆனால், சித்த மருத்துவத்தில் இதை சுத்தி செய்து பயன்படுத்துகின்றனர். இது பசும்பாலில் வேகவைத்து, "பிட்டவியல்" முறையில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட அஸ்வகந்தா சிறந்த பலனைத் தருகிறது. அஸ்வகந்தா லேகியம் மற்றும் அரிஷ்டம் (டானிக்) வடிவிலும் கிடைக்கிறது. அரிஷ்டத்தை தினமும் காலை 20 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் சூரணமாக, வெந்நீர் அல்லது நெய்யில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி சிட்டுக்குருவி லேகியம் என்பது ஆண்களுக்கான ஒரு பாரம்பரிய மருந்து என்றும் இது ஆண்களின் பாலியல் செயல்திறனை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்றார். இதில் அஸ்வகந்தா போன்ற பல மூலிகைகள் கலந்துள்ளன. இது சோர்வாக இருக்கும் ஆண்கள், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பாலியல் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுகிறது என்று டாக்டர் நித்யா கூறினார்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: