நிறைய பெண்களுக்கு இந்த பிரச்சனை; வாழைப் பிஞ்சு, வாழைப் பூ ரொம்ப முக்கியம்: டாக்டர் நித்யா
இரத்த சோகையினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், இதனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதன் விளக்கத்தை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆண்களை விட பெண்களே அதிகமாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுவதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, படபடப்பான உணர்வு, திடீரென தலை சுற்றுவது போன்றவை இரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள் தான். மேலும், சிறுநீரக பாதிப்புகளாலும் இரத்த சோகை ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு 14 முதல் 18 வரையிலும், பெண்களுக்கு 12 முதல் 15 வரையிலும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இதன் அளவு சுமார் 8 அல்லது 9 ஆக தான் இருக்கிறது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இதன் காரணமாகவே பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இரத்த சோகை இருப்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பிஞ்சு, வாழைப்பூ ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
இந்த வாழைப்பூவில் இருந்து நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து விடும். இவை இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவி செய்கின்றன. இதேபோல், வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வாழைப்பிஞ்சை சமைத்து சாப்பிட வேண்டும். மேலும், சுண்டைக்காய். கொத்தவரங்காய், முருங்கைக் கீரை, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி போன்ற பொருட்களையும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisement
இவை அனைத்திலும் இரும்புச் சத்து இருப்பதால், இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவி செய்யும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.