சர்க்கரை நோயாளிகள், குளுக்கோஸ் கட்டுபடுத்தும் ஹார்மோன்களுக்கு நமது உடலில் உள்ள செல்கள் ஒத்துழைக்காமல் போகும் நிலையைத்தான் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்று அழைப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வெவ்வேறு உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இந்த நிலை ஏற்றும் குறிப்பாக தெற்காசியாவில் இது ஏற்பட காரணம், அதிகளவில் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்வதுதான்.
சீனாவில் கூட இப்போது யாரும் அதிக அளவில் அரிசியை சாப்பிடுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேப்பாள், மால்தீவ்ஸ் பூட்டானில் அரிசி சாப்பிடுவதால், இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்வதில்லை.
குறிப்பாக தேவைக்கு அதிகமான கார்போஹைட்ரேட்ஸ் உடல் பருமனை உருவாக்கும். குறிப்பாக மத்தியில், அதாவது வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. இந்த கொழுப்பு, இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்குகிறது. இதுபோல வயிற்றில் கொழுப்பு இருப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் தசைகளில் கொழுப்பு படிந்திருக்கும். இந்நிலையில் இந்த கொழுப்பு இல்லை என்றால், இன்சுலின் நன்றாக செயல்படும்.
இந்நிலையில் இந்த கொழுப்பு , இன்சிலின் செயல்பாட்டை மெதுவாக்குகிறது. இந்நிலையில் நாம் அரிசி மற்றும் கோதுமையை அளவாக சாப்பிட்டல், நிச்சயம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படாது. ஆனால் நம் மூன்று வேளை உணவில், பெரும்பாலும், சப்பாத்தி அல்லது அரிசிதான் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதனால் நாம் தட்டுகளில் பாதி காய்கறி, கால்பகுதி புரோட்டீனும், கால் பகுதி கார்போஹைட்ரேட்- இருக்கும் அளவிற்கு நாம் சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் தீட்டப்பட்ட அரிசி, சுத்திகரிக்கப்பட்ட கோதுமைக்கு பதிலாக சிறுதானியம், ஓட்ஸ், நவதானியங்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுபோல எல்லா பழங்களை நாம் சாப்பிட முடியாது. வாழைப்பழம், மாம்பழங்கள், இருக்கும் அதிக சர்க்கரை இன்சிலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படுத்தும். குறிப்பாக பழச் சாறுகளை எடுத்துக்கொள்ள கூடாது. நாம் சாப்பிடும் கொழுப்பு சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு சத்து உள்ள நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கும்.
இதனால் ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை, கடுகு எண்ணெய் எடுத்துக்கொண்டால், இன்சிலின் செயல்பாட்டை பாதிக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil