scorecardresearch

சாப்பாட்டில் அதிக உப்பா? ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ரொம்ப சிக்கல்

உப்பை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று முக்கியமான விஷயம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆண் மற்றும் பெண்கள் உப்பு எடுத்துக்கொள்வதிலும், அதை உடல் ஏற்றுக்கொள்வதிலும் வேறுபாடுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

உப்பு

உப்பை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று முக்கியமான விஷயம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆண் மற்றும் பெண்கள் உப்பு எடுத்துக்கொள்வதிலும், அதை உடல் ஏற்றுக்கொள்வதிலும் வேறுபாடுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

அதிக உப்பை எடுத்துக்கொண்டால், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் வருகிறது. இந்நிலையில் அதிகபடியான உப்பை எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பவது அதிகமாக இருக்கும். ஆனால் இது மாதவிடாய் நின்ற பிறகுதான் ஏற்படுகிறது.

உப்பு அதிகரிப்பதால் ஏற்படும் எஸ்.எஸ்.பி ரத்த அழுத்தம் பெண்களை பாதிக்கும். மாதவிடாய் முடிந்த பிறகு இதன் பாதிப்பு அதிகமாகிறது. ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை  எடுத்துச் செல்லும் ரத்த குழாய்களை பாதிக்கும். மேலும் இந்த ரத்த கூழாய்கள் உடலுக்கு வேண்டாததையும் எடுத்து செல்கிறது.

சில நபர்களுக்கு குறைந்த அளவிலான சோடியம் மட்டுமே போதுமானதாக இருக்கும். 500 மில்லி கிராமே போதுமானதாக இருக்கும். நாம் சாப்பிடும் உப்பால்தான் உடலில் உள்ள தசைகள் சுருங்கி  விரிகிறது. மேலும் உடலில் உள்ள  மினரல்ஸ்  மற்றும் தண்ணீர் சீராக இருக்க உதவுகிறது.

உப்பில் 40% சோடியம் மற்றும் 60 % குளோரைட்டு இருக்கிறது. பெண்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். குறைந்த அளவில் உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வை பொறுத்தவரை, குறிப்பிட்ட அளவு உப்பை எடுத்துகொள்ளும்போது, ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக பெண்கள் உடலில் சுரக்கும்  ஹார்மோன்கள் மாறுபடுகிறது. இதனால் பெண்களுக்கு உப்பு எடுத்துகொள்ளும் தன்மை குறைகிறது.

இந்நிலையில் பொட்டாஷியம்- சோடியம் அளவு சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வாழைப்பழம், உருளைக் கிழங்கு, வால்நட் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

பப்பாளி மற்றும் தண்ணீர் பூசணி விதைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் பயிற்சி மிகவும் தேவையான ஒன்று.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Does salt consumption affect men and women differently