/indian-express-tamil/media/media_files/2025/06/23/kitchen-hacks-2025-06-23-14-47-44.jpg)
சமையல் என்பது ஒரு கலை. சில எளிய, ஆச்சரியமான குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் சமையலின் சுவையையும், ஆரோக்கியத்தையும், செய்முறையின் தரத்தையும் மேம்படுத்த முடியும். இந்த கிச்சன் மற்றும் குக்கிங் ஹேக்ஸ்கள் உங்களின் சமையலை இன்னும் சுவையாக்க உதவும்.
டிப்ஸ் 1: பூரி சுட்டால் சீக்கிரம் நமத்துப் போய்விடும் என்ற கவலை இனி வேண்டாம். பூரிக்கு மாவு பிசையும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால், பொரித்த பூரி அதிக நேரம் மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் நமத்துப் போகாமல் இருக்கும்.
டிப்ஸ் 2: காரப் பலகாரங்கள் செய்யும் பொழுது, மாவு பிசையத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக பிரண்டை நீர் (பிரண்டையை அரைத்து எடுக்கப்பட்ட நீர்) விட்டுப் பிசைந்தால், பலகாரங்கள் காரல், கசப்பு இல்லாமல் இருக்கும். மேலும், பலகாரங்கள் சிவந்து போகாமல், வெடிக்காமல், சரியான பக்குவத்தில் சுட்டெடுக்கலாம். இது பலகாரங்களின் தரத்தை நிச்சயம் மேம்படுத்தும்.
டிப்ஸ் 3: திடீரென தோசை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது, மாவை அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. உடனடியாகத் தோசைக்கு கோதுமை மாவு - 1 கப், ராகி மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் இந்த விகிதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து உடனடியாக தோசை சுடலாம். இந்த தோசைகள் மிகவும் மிருதுவாக இருக்கும்
டிப்ஸ் 4: சேமியா, இடியாப்பம், நூடுல்ஸ் போன்றவற்றில் சேவைகள் செய்யும்பொழுது, மசாலாக்களுடன் சேர்த்து பழுத்த தக்காளி (Ripe Tomato) ஒன்றை நன்றாக அரைத்து அதையும் கொதிக்கவைத்துச் சேர்க்க வேண்டும். பிறகு வெந்த சேமியா, நூடுல்ஸ், இடியாப்பத்தைச் சேர்த்துக் கிளறினால், ஒரே சீரான, கலரான, பார்ப்பதற்கு அழகாகவும், ருசியாகவும் இருக்கும் சேவைகள் கிடைக்கும்.
டிப்ஸ் 5: லட்டு செய்யும்போது பொரித்த பூந்தி, உடைந்த முறுக்கு வகைகள் போன்றவற்றை வீணாக்காமல் பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மைதாவைத் திரட்டி சிறுசிறு துண்டுகளாகப் பொரித்துச் சேர்க்க வேண்டும். வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு வறுத்துச் சேர்த்துக் கலந்துவிட்டால், அருமையான மிக்ஸர் கிடைத்துவிடும்.
டிப்ஸ் 6: லட்டு வகைகள் பிடிக்க வராமல் இருந்தால் பால் சேர்த்துப் பிடிப்பது வழக்கம். ஆனால், அப்படிப் பால் சேர்த்துப் பிடித்த உருண்டைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் கெட்டுவிடும். எனவே, சீக்கிரமாக அனைவரிடமும் கொடுத்துத் தீர்த்துவிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.