உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருளில் முக்கியமானது பூண்டு. இந்தப் பூண்டு நீரிழிவு நோய் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் ஆற்றல் மிக்கது.
இந்த நிலையில், காலையில் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்த வறுத்த பூண்டுவில் ஆண்களுக்கு ஒரு ஸ்பெஷலான நன்மையும் உள்ளது.
இதைப் பார்க்கும் முன் நீரிழிவு நோயாளிகள் பூண்டை சாப்பிடுவதால் மனஅழுத்தம் குறைந்து அவர்களின் உடலும் மனமும் ஆரோக்கியம் கொள்கிறது.
அதேபோல் பூண்டு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறதாம். எனவே உடல் பருமனால் அவதியுறும் நபர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். இதனால் இதயப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பும் தடுக்கப்படுகிறது.
இத்தனை நம்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள பூண்டு ஆண்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. தினமும் காலை 6 பூண்டை வறுத்து உண்டால் உடல் ஆரோக்கியம் பெருகி, வெள்ளை அணுக்களை பெருக்கிறது. இதனால் உடல் பாதுகாப்பு அதிகரிக்கிறது. அதேபோல், பாலியல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
மேலும் வறுத்த பூண்டை நறுக்கி தேனில் தொட்டும் சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் விலகி, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. எலும்புகளும் பலமாகிறது. குடல் புண்களும் குணமாகிறது.