scorecardresearch

5 அபாயம் இருக்கு… டெய்லி நீங்க எத்தனை கிராம் உப்பு சாப்பிடுறீங்க?

சோடியம், இது ஒரு முக்கியமான எலெக்ட்ரோலைட் , நமது தசைகள் விரியவும், அதுபோல சுருங்கவும் உதவுகிறது. நமது உடலில் இருக்கும் திரவத்தின் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை சீராக வைத்திருக்கும். அதுபோல், நமது நரம்பு, சதை செயல்பாடு, இதய செயல்பாடுக்கு காரணமாக இருக்கிறது.

5 அபாயம் இருக்கு… டெய்லி நீங்க எத்தனை கிராம் உப்பு சாப்பிடுறீங்க?

சோடியம், இது ஒரு முக்கியமான எலெக்ட்ரோலைட் , நமது தசைகள் விரியவும், அதுபோல சுருங்கவும் உதவுகிறது. நமது உடலில் இருக்கும் திரவத்தின் அளவு மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை சீராக வைத்திருக்கும். அதுபோல், நமது நரம்பு, சதை செயல்பாடு, இதய செயல்பாடுக்கு காரணமாக இருக்கிறது.

குறைந்த சோடியம் கொண்ட உப்பை சாப்பிட்டால் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும். இதய துடிப்பு அதிகரித்தல், சதை வலி, இதய கோளாறு. இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்ளாத தன்மை.

ஒரு நாளுக்கு 9 முதல் 12 கிராம் உப்பை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக, 18 கிராம் வரை பயன்படுத்தலாம். நாம் உடல் பயிற்சி செய்கிறோம் என்றால் வியர்வை வழியாக உப்பு தன்மை வெளியேறும். இதனால் கூடுதலாக 2 கிராம் உப்பு எடுத்துக்கொள்ளலாம். 

ஒருவர் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அதை குறைக்க வேண்டும்.  உதாரணமாக ரத்த அழுத்தம், வயிறு உப்புதல், இதய நோய் மற்றும் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பது.

உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டால்,  வயிறு உப்புதல், அடிக்கடி நடைபெறும். நமது சிறுநீரகம்தான் உடலில் உள்ள சோடியம் – வாட்டர் அளவை சீர்படுத்துகிறது.  அதிக உப்பு சாப்பிட்டால் இது அதிக சோடியம் உடலுக்கு செல்லும் இது வயிறு உப்புதலுக்கு காரணமாக இருக்கிறது.

அதிக படியான உப்பு தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  இது வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிகபடியான உப்பை எடுத்துக்கொண்டால், அதிக தண்ணீர் தாகம் எடுக்கும். இதனால் நாம் அதிக பானங்களை எடுத்துகொள்வோம்.  இதனால் உடலில் உள்ள சோடியம் அளவு அதிகரிக்கும். இதை நாம் கவனிக்காமல் இருந்தால், குழப்பம், சோர்வு ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

அதிக உப்பு சாப்பிட்டால், ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதை தடுக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

புதிய ஆய்வு ஒன்றில் அதிக உப்பு சாப்பிடுவதால், எக்ஸிமா என்ற தோல்  நோய் ஏற்படுவதாக  கூறப்படுகிறது. மேலும் ஆஸ்துமா மற்று வாதம் ஏற்படவும் வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Five reasons to cut down on your consumption of salt