தக்காளி விலை இந்தியாவில் உள்ள அதிக மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் தக்காளி விலை ரூ. 110 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால் அதற்கு பதிலாக சில உணவு பொருட்கள் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
நெல்லிக்காய்: இந்நிலையில் தக்காளி போல சுவையை நெல்லிக்காய் வழங்குகிறது. இந்நிலையில் இதில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
சிவப்பு குடை மிளகாய் : இது பார்ப்பதற்கு தக்காளியை போல் இருக்கும். இது தக்காளியைப் போல் சுவை கொடுக்க வறுக்க வேண்டும். இதுபோல இந்த குடை மிளகாய் அரைத்ததை சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்தால் தக்காளி போல இது இருக்கும்.
வினிகர்: தக்காளியைப் போல் புளிப்புச் சுவையை கொண்டது. இந்நிலையில் ஆப்பிள் சைடர் வினிகர் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் பேக்ட்டீரியா தொற்று எதிரான பண்புகள் உள்ளது.
பூசணி: இதன் கிரீமி தன்மை மற்றும் இனிப்பு சுவை தக்காளியைப் போல உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது மிகவும் விலை குறைவு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“