கடையில் காளான் மசாலா சாப்பிட்டால் வயிற்று வலி உள்ளிட்ட சிக்கல் ஏற்படலாம். இதனால் ரொம்ப சுலபமாக வீட்டிலேயே காளான் மசாலா செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
200 கிராம் முட்டை கோஸ்
அரை கப் காளான்
2 அரை டீஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவு
1 ½ டீஸ்பூன் அரிசி மாவு
2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 டீஸ்பூன் கரம் மசாலா
உப்பு
எண்ணெய்
2 பச்சை மிளகாய்
அரை கப் வெங்காயம்
கருவேப்பிலை
கான்பிளவர் மாவு
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் கரம் மசாலா
கொத்தமல்லி
தக்காளி சாஸ்
சோயா சாஸ்
செய்முறை: முட்டை கோஸை நன்றாக நறுக்க வேண்டும். காளானை கழுவி நன்றாக நறுக்கிகொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில், நறுக்கிய காளான், முட்டை கோஸ், கோதுமை மாவு, அரிசி மாவு, கான்பிளவர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, கரம் மாசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். முட்டை கோஸில் ஈரப்பதம் வெளியாகும் என்பதால், சிறிய அளவில் தண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள். தற்போது இதை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். தொடர்ந்து சிறு வடைகளை போல் எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுங்கள்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்னெய் சேர்த்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து மீண்டும் மிளகாய் பொடி, உப்பு, கரம் மசாலா சேர்த்து, அதில் கான்பிளவர் மாவு கரைத்து சேர்த்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து தண்ணீர் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் பொறித்த காளானை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். கடைசியாக தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கொள்ளுங்கள். கடைசியில் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவிக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“