குறிப்பாக நாம் சாப்பிடும் அரிசி மற்றும் கோதுமையால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் எடுத்துக்கொண்டால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படலாம் என்றும் மருத்துவ துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 5 கண்டங்கள் மற்றும் 20 நாடுகளில் உள்ள 1, 35,000 மக்களிடம் செய்த ஆய்வில் பல்வேறு விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 வருடங்கள் தொடர்ந்து இவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆய்வில் முதலில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட வெள்ளை அரிசியை தொடர்ந்து சாப்பிட்ட பிறகு சர்க்கரை நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமானது. இந்நிலையில் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் ரைஸ் சாப்பிட்ட அதிக உடல் எடை உடையவர்கள் மற்றும் சர்க்கரை நோய் தாக்கம் உடையவர்களுக்கு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பிரவுன் ரைஸ், பருப்பு மற்றும் தாவரவகை புரத சத்து சர்க்க்ரை நோய்யை குறைக்க உதவுகிறது.
தீட்டப்படாத அரிசி
இந்நிலையில் தீட்டப்படாத அரிசியில் மூன்று பகுதிகள் உள்ளது. வெளியே இருக்கும் பகுதி அதிக நார்சத்து நிறைந்தது. இதன் நிறம்தான் அரிசியின் நிறத்தை முடிவு செய்கிறது. இந்த வெளிப்பகுதியை ஆங்கிலத்தில் பிரான் ( bran) என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் சத்துகள் நிறம்பிய பகுதியை ஜர்ம் ( germ) என்று அழைக்கிறோம். இந்த இரண்டு பகுதிகளிலும் புரத சத்து, நார்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது.
இந்நிலையில் தீட்டப்படாத அரிசியில் இவ்வளவு சத்துக்களும், நாம் சாப்பிடும்போது உடலால் எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள லிக்னஸ் ( lignans ) ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் அதிக உடல் எடை உள்ளவர்கள் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
வெள்ளை அரிசி அல்லது தீட்டப்பட்ட அரிசி
இந்த அரிசியில், இதுபோன்ற எந்த சத்துக்கள் இருப்பதில்லை. குறிப்பாக சில புரத சத்து மட்டுமே இருக்கிறது. தீட்டபட்ட அரிசியை விட வெள்ளை அரிசி கிட்டதட்ட 5 வருடங்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் தீட்டப்படாத அரிசில் 6 மாதங்களுக்கு மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.