/indian-express-tamil/media/media_files/2025/10/27/smoking-2025-10-27-12-49-24.jpg)
கிராம்பு மணம் மிக்க ஒரு சமையல் பொருள் மட்டுமல்ல, எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கை மருந்தும் கூட. கிராம்பை நீரில் ஊறவைத்து அல்லது கொதிக்கவைத்து அருந்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து 15 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஒய்.எஸ்.குக்கிங் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
கிராம்பு தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள முக்கிய மூலப்பொருள் 'யூஜெனால்' ஆகும். காலையில் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, உணவு எளிதில் செரிக்க உதவுகிறது. குடல் வீக்கம், வாயுத் தொல்லை, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும். வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி, எடை குறைப்பு முயற்சிக்கும் ஆதரவளிக்கும்.
கிராம்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி, இருமல் போன்ற தொற்றுகள் மற்றும் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாய் துர்நாற்றத்தைப் போக்கி, ஈறு மற்றும் பல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இது ஒரு இயற்கையான வாய் கொப்பளிக்கும் திரவமாகவும் செயல்படலாம். கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, அதன் செயல்பாட்டைப் பாதுகாக்க உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
நீங்கள் சிகரெட் புகைப்பவராக இருந்து, உங்கள் நுரையீரலில் புகைக்கூடு படிந்துவிட்டதாக உணர்ந்தால், கிராம்புத் தண்ணீர் ஒரு துணை மருந்தாக உதவக்கூடும். கிராம்பு ஒரு இயற்கையான கபம் நீக்கியாக செயல்படுகிறது. இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை இளக்கி, வெளியேற்ற உதவக்கூடும். புகையினால் நுரையீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க கிராம்புத் தண்ணீர் உதவுவதாக ஆயுர்வேதத்தில் நம்பப்படுகிறது. புகைப்பழக்கத்தால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க கிராம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன. இது நுரையீரலின் சேதமடைந்த செல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் துணை புரியலாம்.
கிராம்பு தண்ணீர்: முதல் 3 முழு கிராம்புகள், ஒரு கிளாஸ் தண்ணீர். இரவில் தூங்குவதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீரில் 2-3 கிராம்புகளைப் போட்டு மூடி வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் இந்தத் தண்ணீரைக் குடிக்கவும். ஊறவைத்த கிராம்பையும் மென்று சாப்பிடலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் 2-3 கிராம்புகளைச் சேர்த்து, பாதியாக வற்றும் வரை (சுமார் 5-10 நிமிடங்கள்) நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us