/indian-express-tamil/media/media_files/2025/10/31/foof-2025-10-31-15-06-39.jpg)
நாம் தினமும் சமைக்கும் பொழுது சில நேரம் சுவை அதிகமாக இருக்கும் சில நேரம் சுவை குறைவாக இருக்கும் அது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? சில நேரங்களில் நாம் ஒரு சில சமையல் பொருட்களை நேரமில்லை என்று அப்படி வறுத்து போடுவோம். அது சமையலில் சுவையை கூட்டும். நேரம் இருக்கும் பொழுது பொறுமையாக நாம் எப்போதும் செய்யும் சமையல் போன்று செய்வோம் அது சமையலின் சுவையை எப்போதும் போல இருக்கச் செய்யும். இப்படி நாம் அவசரத்தில் செய்யும் பொழுது நாம் என்ன செய்தோம் என்று கவனித்திருக்க மாட்டோம். ஆனால், அந்த சிறு மாற்றம் முழு சமையலையும் மாற்றிவிடும். இப்படி உங்கள் அன்றாட சமையலில் என்ன செய்தால் உணவுகளின் சுவையை அதிகரிக்கலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
- பொறியல் அல்லது குழம்பில் வெங்காயம் சேர்க்கும் பொழுது அதை மூடி வைத்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி பொன்னிறமாக இருக்கும்.
- அசைவ ரெசிப்பிகளுக்கு வெங்காயத்தை வறுத்து மேலே அலங்கரிப்பதுபோல சைவ சமையலுக்கும் கிரிஸ்பாக வெங்காயத்தை வதக்கி புலாவ், பிரியாணி, குருமாக்கள் மேலே தூவி இறக்க சுவை அதிகரிக்கும்.
- மராட்டி மொக்கு, அன்னாசி பூ போன்ற மசாலா பொருட்களை நாம் அப்படி எண்ணெய்யில் போட்டு தாளிப்போம். ஆனால், அப்படி செய்யாமல் அதனை லேசாக வறுத்து பொடியாக்கி தாளித்தால் சுவை அதிகரிப்பதோடு கொஞ்சம் சமையலில் சேர்த்தாலே போதுமானதாக இருக்கும்.
- பீட்ரூட் சூப் செய்யும்போது தக்காளி சேர்த்து வேகவிடவும். பின் பார்லி வெந்த தண்ணீர் சேர்த்து மசித்து தாளித்து பரிமாற திக்கான சூப் சுவையாக இருக்கும்.
- தேங்காய் போளி, பருப்பு போளி செய்து போரடித்து விட்டால் அதற்கு பதிலாக நட்ஸ் சேர்த்து பூரணம் செய்யுங்கள் இல்லையென்றால் கேரட், பால் கோவா வெல்லம் சேர்த்து பூரணம் செய்தால் சுவை அதிகரிப்பதோடு சாப்பிடவும் புதுமையாக இருக்கும்.
- அப்பளத்தை சுடும்போது நெய் மேலாக தடவி சிறிது கொரகொரப்பாக நணுக்கிய மிளகுத்தூள் தூவி சுட சுவை நன்றாக இருக்கும்.
- பருப்பு துவையல் அரைக்கும்போது கொஞ்சம் கொள்ளு சேர்த்து வறுத்து அரைத்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
- தண்ணீரை ஐஸ் கட்டிகள் தயாரிக்க வைக்கும்போது தண்ணீருடன் புதினா ஜுஸ், இஞ்சி ஜுஸ், உப்பு சேர்த்து ஊற்றி வைத்து பின் ஜுஸ் தயாரிக்கும் போது சுவையாக இருக்கும்.
- புட்டிங், பாப்ஸிகள் போன்றவை தயாரித்து அச்சுகளில் ஊற்றும் முன் வெண்ணெய் தடவி ஊற்றி, பின் செட் ஆனதும் எடுக்க சுலபமாக எடுக்க வரும்.
- பூண்டை நேர் வாக்கில் வெட்டினால் சுலபமாக வெட்டலாம்.
- முட்டைக்கோஸ், முள்ளங்கி வைத்து சமையல் செய்யும் பொழுது அதன் தண்டையும் சேர்த்து செய்தால் சமையல் சுவையாக இருக்கும்.
- பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை சமைப்பதற்கு முன் வெந்நீரில் போட்டு ஊறவைத்து அதன்பின்னர் சமைத்தால் காரத்தன்மை குறைவதோடு அல்சர் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
- புளியோதரை செய்யும்போது சிறிது சுக்குப் பொடி, மிளகு, வறுத்த எள் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து செய்ய சுவையாக இருக்கும்.
- எந்தவித பஃர்பி செய்யும் போதும் மில்க் பவுடர், பால் கோவா, பொடித்த சர்க்கரை, வறுத்த கடலைமாவு சேர்த்து கலந்து கெட்டியாக நுரைத்து வந்ததும் இறக்க சுவை அதிகரிக்கும்.
- ஓட்ஸ்ஸை கஞ்சியாக குடிப்பதைவிட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சமைத்து சாப்பிட்டால் சுவையாகவும் புதுமையாகவும் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us