/indian-express-tamil/media/media_files/2025/06/28/paya-recipe-2025-06-28-13-30-40.jpg)
ஆட்டுக்கால் பாயா சுவையில் சிறந்திருப்பதோடு, எலும்புகளுக்கு பலம் அளிக்கும் மருத்துவ குணங்களையும் கொண்டது. குளிர்ந்த மற்றும் மழைக்காலங்களில் இந்த சூடான பாயாவை இட்லி, தோசை, ஆப்பம், அல்லது இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதிதான். இந்த ஆட்டுக்கால் பாயா நடிகர் அதர்வாவுக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த ரெசிபி, எலும்புகளைத் தனியாக வேகவைத்து, மசாலாவுடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சமைக்கும் முறை ஆகும். இதனை எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் துண்டுகள்
சின்ன வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு விழுது
உப்பு
எண்ணெய்
மிளகுத் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
தேங்காய்
சீரகம்
மிளகு
முந்திரி
கசகசா
செய்முறை:
ஆட்டுக்காலில் உள்ள கருகிய பகுதிகள் மற்றும் முடியை நீக்குவது குழம்பின் சுவைக்கு மிகவும் முக்கியம். ஒரு பாத்திரத்தில் ஆட்டுக்கால் துண்டுகளை சேர்த்து, 3 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இப்போது ஒரு கத்தியைப் பயன்படுத்தி, ஆட்டுக்காலின் வெளிப்புறத்தில் உள்ள கருக்கிய பகுதிகளை நன்கு சுரண்டி எடுக்கவும். இது கருகிய வாசனையை நீக்குவதோடு, மீதமுள்ள முடிகளையும் அகற்றும்.
இதை சுத்தமான தண்ணீரில் நன்கு அலசவும். இப்போது 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசறவும். இதை 10 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் மீண்டும் நன்கு அலசி எடுக்கவும். இப்போது சமையலுக்கு ஆட்டுக்கால் தயார். ஆட்டுக்காலை வேகவைத்தல்ஒரு பிரஷர் குக்கரில் சுத்தம் செய்த 10-11 ஆட்டுக்கால் துண்டுகள், 1 நறுக்கிய வெங்காயம், 1 நறுக்கிய தக்காளி, 1 பச்சை மிளகாய், தேவையான உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி போடவும்.இதை 12 விசில் வரும் வரை வேகவைத்து, அடுப்பை அணைக்கவும். விசில் முழுமையாக அடங்கியதும் திறந்து வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, 3 பச்சை மிளகாய், 4 முந்திரி, மற்றும் கசகசா ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையான விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.
மற்றொரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, 4 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், தாளிப்புப் பொருட்களான 2 ஏலக்காய், பட்டைத் துண்டு, 2 கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு 2 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை (3-4 நிமிடங்கள்) வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி இலைகள், மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை (ஒரு நிமிடம்) வதக்கவும். அடுத்து, 1 நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது குழையும் வரை (3 நிமிடங்கள்) சமைக்கவும். இப்போது, முன்பே வேகவைத்த ஆட்டுக்கால்களை, அது வேகவைத்த தண்ணீரோடு குக்கரில் ஊற்றவும்.
மிளகுத் தூளைச் சேர்த்து, உப்புச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால் மேலும் உப்பைச் சேர்க்கலாம். கடைசியாக, அரைத்து வைத்த தேங்காய்ப் பசையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிரஷர் குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை சமைக்கவும். ஆவி அடங்கியதும், சுவையான ஆட்டுக்கால் பாயாவைத் திறந்து பரிமாறவும். இந்த சூடான, மணமிக்க ஆட்டுக்கால் பாயாவை தோசை, ஆப்பம், அல்லது இடியாப்பத்துடன் சேர்த்துப் பரிமாறவும். கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us