/indian-express-tamil/media/media_files/2025/07/12/spicy-chutney-2025-07-12-17-24-20.jpg)
அரைச்சு விட்ட தக்காளி தொக்கு என்பது காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அருமையான ஒரு சைடிஷ் ஆகும். வழக்கமான தக்காளி தொக்கை விட, இந்தச் செய்முறையில் வர மிளகாய் மற்றும் பூண்டு அரைத்து சேர்ப்பதால், தொக்கின் சுவை பன்மடங்கு கூடுகிறது. குறைந்த நேரத்தில், ஆனால் அதிக சுவையுடன் சமைக்க விரும்பும் சமையல் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது மூன்று நாட்களுக்கு மேல் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால், பயணங்களின்போதும் எடுத்துச் செல்லலாம். இதனை எப்படி செய்யலாம் என்று உஷா ஃபுட் ஸ்பாட் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி 1/2 கிலோ
வர மிளகாய் 8-10
பூண்டு 10 பல்
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயத்தூள்
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
உப்பு
வெல்லம்
செய்முறை:
முதலில், கொடுக்கப்பட்ட வர மிளகாயை 20 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும். ஊறிய மிளகாய், 10 பல் பூண்டு ஆகியவற்றைத் தண்ணீர் விடாமல் அல்லது மிகக் குறைந்த நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரை கிலோ தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, நன்கு குழையும் வரை வதக்கவும். வதங்கியதும் ஆற வைத்து, அதையும் மிக்ஸியில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் (50 மில்லி) சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
தாளித்ததும், முதலில் அரைத்து வைத்த வர மிளகாய் - பூண்டு விழுதைச் சேர்த்து, எண்ணெயில் அதன் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு, அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, கூடவே மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். இந்தக் கலவையைத் தொக்கு நன்கு சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சமைக்கவும். இறுதியாக, விரும்பினால் ஒரு சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான அரைச்சு விட்ட தக்காளி தொக்கு தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us