/indian-express-tamil/media/media_files/2025/10/23/curry-leaves-chicken-2025-10-23-16-41-41.jpg)
மதுரை சமையலில் ஒரு தனிச்சிறப்பு மிக்க ரெசிபியாக இருக்கும் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இதில் சேர்க்கப்படும் சிறப்பு மசாலா பொடி மற்றும் கறிவேப்பிலையின் ஆதிக்கம் சுவையை அதிகரிப்பதுடன், கறிவேப்பிலையை யாரும் ஒதுக்க முடியாத ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது. இது தயிர் சாதம், சப்பாத்தி, இட்லி, பழைய சோறு என அனைத்திற்கும் சிறந்த சைட் டிஷ் ஆகும். இந்த சுக்காவை செய்யும்போது, தக்காளி மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
மிளகு, சீரகம், சோம்பு
கறிவேப்பிலை
சிக்கன்
சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்
மல்லித்தூள்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
உப்பு
கடலை எண்ணெய்
புதினா, மல்லி
செய்முறை:
வெறும் வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலையைச் சேர்த்து, அது காய்ந்து, கையால் நசுக்கினால் உடையும் பக்குவம் வரும்வரை (5-7 நிமிடங்கள்) மிதமான தீயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை நன்கு நைஸாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும். வாணலியில் கடலை எண்ணெயை ஊற்றி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை நீங்க வதக்கவும். மஞ்சள் தூள், மல்லித்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அரைத்து வைத்த கறிவேப்பிலை மசாலாப் பொடியை சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி தொக்கு பதத்திற்கு கொண்டு வரவும். ஒரு கைப்பிடி பச்சைக் கறிவேப்பிலையையும் இதில் சேர்க்கவும்.
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து அலசிய சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் நன்கு ஒட்டும்வரை கிளறி மேரினேட் செய்யவும். மிகக் குறைந்த நீரைத் தெளித்து, சிக்கனை 15-20 நிமிடங்கள் வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்து, செமி-கிரேவி பதம் வந்தவுடன், கடைசியாக புதினா மற்றும் மல்லித்தழைகளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us