/indian-express-tamil/media/media_files/2025/10/22/pongal-2025-10-22-18-02-57.jpg)
பொங்கல் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் நல்ல மணக்க மணக்க நெயை ஊற்றி சூடாக பொங்கல் சாப்பிடும் போது இன்னும் வேண்டும் என்று கேட்க தோன்றும். இந்த பொங்கலில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிடும் போது பொங்கல் சாப்பிடுவதற்கு அல்டிமேட்டாக இருக்கும். எப்படி உள்ளே போகிறது என்றே தெரியாது.
பெரும்பாலும் கோயில் பொங்கலை தான் நாம் விரும்புவோம். பொங்கலில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதால் பொங்கல் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. கோயில் பொங்கல் ரேஞ்சில் அதிலும், நல்ல தேங்காய் பால் ருசியுடன் கூடிய பொங்கலை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு
வெங்காயம்
தக்காளி
பூண்டு
பச்சை மிளகாய்
கத்திரிக்காய்
பச்சரிசி
தேங்காய் பால்
தேங்காய் எண்ணெய்
நெய்
முந்திரி
மிளகு
சீரகம்
கறிவேப்பிலை
கடுகு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
சாம்பார் தூள்
செய்முறை
ஒரு குக்கரில் பாசி பருப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, கத்திரிக்காய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும். இதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து கொட்டினால் கத்திரிக்காய் கோஸ்து ரெடியாகிவிடும்.
மற்றொரு குக்கரில் பொங்கல் செய்வதற்கு பச்சரிசி, பாசி பருப்பு, பெருங்காயம், தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இப்போது பொங்கல் நன்றாக வெந்து வந்துவிடும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய், நெய், இஞ்சி, மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். இதனை பொங்கலில் கொட்டி சாப்பிட்டு பாருங்க சுவை அல்டிமெட்டாக இருக்கும். தேய்காய் பால் ஊற்றி பொங்கல் செய்திருப்பதால் ஒரு வாய் வைத்தாலே மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்க தூண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us