/indian-express-tamil/media/media_files/2025/10/19/vadai-1-2025-10-19-18-04-38.jpg)
பண்டிகை என்றாலே இனிப்புகள், பலகாரங்களுடன் வடைகளும் இருக்கும். அதிலும் நல்ல மொறு மொறுனு உளுந்த வடை இருந்தால் இரண்டு இட்லி சாப்பிடுவோர் எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி சேர்த்து வாங்கி சாப்பிடு வாங்க. ஆனால், அந்த உளுந்த வடை சரியான பக்குவத்தில் இல்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் வடையை தொட்டு கூட பார்க்கமாட்டார்கள்.4
நீங்கள் வீட்டில் உளுந்த வடை சுடும் பொழுது ஒரு சில டிப்ஸ்-ஆ ஃபாலோ பண்ணுனாலே போது வடை சும்மா மொறு மொறுன்னு சூப்பரா வரும். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் நீ, நான் என்று வடையை போட்டு போட்டு காலி செய்வார்கள். உளுந்த வடை வெளியே மொறு மொறுனும் உள்ளே சாஃப்ட்டாகவும் வர என்ன செய்ய வேண்டும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
உளுந்தை மூன்று மணிநேரம் நன்றாக ஊறவைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வடை சுடுவதற்கு முன்பு மாவை ஒரு பீட்டர் வைத்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். வடை மாவு நீங்கள் கையில் எடுத்து பார்த்தால் கெட்டியாக இருக்க வேண்டும் அந்த பதத்தில் அரைக்க வேண்டும். உங்களுக்கு கைகளால் வடை சுட வரவில்லை என்றால் ஒரு டீ வடிக்கட்டி மீது மாவை வைத்து உரிய வடிவத்தில் எடுத்துக் கொண்டு எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும். மாவை எண்ணெய்யில் போடுவதற்கு முன்பு எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும்.
வடை மாவை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுப்பதற்கு முன்பு கொஞ்சம் மாவை கையில் எடுத்து எண்ணெய்யில் போட்டு பார்க்கவும். அந்த மாவு அடியில் தங்காமல் மேலே வந்தால் எண்ணெய் நல்ல சூடாக இருக்கிறது என்று அர்த்தம். அதன் பின்னர் வடை சுட ஆரம்பிக்கலாம். மாவை எண்ணெய்யில் போட்டவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும், இல்லை என்றால் வடை வெளியில் வெந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
மிதமான தீயில் வைக்கும் பொழுது உள்ளே மற்றும் வெளியே சமமாக வெந்து வரும். கடைசியாக வடை சுடும் பொழுது மாவு கொஞ்சம் தண்ணீர் பதத்தில் இருந்தால் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வடை சுட்டு பாருங்கள் வடை சூப்பராக வரும். இனிமேல் உளுந்த வடைக்கு மாவு அரைக்கும் போது இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி மாவு அரைத்து பாருங்கள் வடை சும்மா நச்சுனு வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us