/indian-express-tamil/media/media_files/2025/11/01/punu-2025-11-01-15-34-36.jpg)
தினமும் மாலை நேரமானதும் ஸ்நாக்ஸ் எதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பள்ளி முடிந்து குழந்தைகள் வந்ததும் ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். வடை, மிச்சர், பூந்தி என்று கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்பதில்லை.
மாலை நேரத்திற்கு நல்ல சூடாக மொறு மொறுவென்று ஸ்நாக் வேண்டும் என்று குழந்தைகள் கேட்பார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் அப்படிதான் கேட்பார்கள். ஆனால், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வடை செய்ய வேண்டும் என்றால் அதற்கு உளுந்தை ஊறவைத்து அரைக்க வேண்டும்.
அப்படி வடை செய்தாலும் சிறிது நேரத்தில் அவை குளிந்து மொறுமொறுப்பு இன்றி போவதால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் வடையை தொட்டு கூட பார்க்கமாட்டார்கள். அப்ப என்ன செய்யலாம் என்று தானே யோசிக்கிறீர்கள். சிம்பிளா மொறு மொறுனு நல்ல குண்டு குண்டா புனுகுலு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி
வேக வைத்த சோறு
வேக வைத்த சாதம்
சில்லி ஃப்ளேக்ஸ்
இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
சீரகம்
செய்முறை
சாப்பாட்டு அரிசியை ஐந்து மணிநேரம் நன்றாக ஊறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் வேக வைத்த சாதம் மற்றும் வேக வைத்த உருளைக் கிழங்கு போட்டு நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் இஞ்சி, சில்லி ஃப்ளேக்ஸ், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது மாவை உருண்டைகளாக போடவும். நல்ல குண்டு குண்டாக புனுகுலு வெந்து வந்ததும். அவற்றை எடுத்துவிடவும். இதனுடன் காரச்சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
உங்க வீட்டில் இட்லி மாவு அரைக்கும் பொழுது கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து அரைத்தால் கஷ்டமே படாமல் இந்த புனுகுலு ஸ்நாக்ஸை ஈஸியாக செய்யலாம். திடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட இந்த ஸ்நாக்ஸை மிகவும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்து கொடுத்துவிடலாம். இந்த ஸ்நாக்ஸை வீட்டில் செய்து பார்த்து குழந்தைகளையும் பெரியவங்களையும் அசத்துங்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us