/indian-express-tamil/media/media_files/2025/04/26/qD0Y3vTqm09TYOWOcpq7.jpg)
மழைக்காலம் அல்லது மாலை நேரம் என்றால் சூடான டீயுடன் ஒரு மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இல்லாமலா? இந்த வெங்காய கெட்டி பக்கோடா, வழக்கமான பக்கோடா போல் இல்லாமல், எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இது கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் டீக்கடைகளில் மிகவும் பிரபலம். இந்த பக்கோடாவின் சிறப்பு என்னவென்றால், இதில் சேர்க்கப்படும் சரியான அளவிலான எண்ணெய், தண்ணீர் மற்றும் மாவைப் பிசையும் தனித்துவமான பக்குவம்தான். இந்தப் பக்கோடா ஒரு வாரம் வரை வைத்திருந்தாலும் மொறுமொறுப்பு மாறாமல் அப்படியே இருக்கும். சூடான இஞ்சி டீயுடன் மட்டுமல்லாமல், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட இது மிக அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு
வெங்காயம்
பூண்டு
அரிசி மாவு
பச்சை மிளகாய்
புதினா & மல்லித்தழை
கறிவேப்பிலை
சோம்பு
பெருங்காயத்தூள்
ஆப்ப சோடா/சமையல் சோடா
உப்பு
எண்ணெய்
செய்முறை:
வெங்காயத்தை பொதுவாக ரைத்தாவுக்கு நறுக்குவது போல மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். இதில் ஈரப்பதம் இல்லாமலிருக்க, எண்ணெயில் பிசைய வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், இடித்த பூண்டு (இடித்தால் தான் வாசமும் காரமும் இறங்கும்), புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், பெருங்காயம், சோம்பு, உப்பு, ஆப்ப சோடா மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
1 கிலோ கடலை மாவு மற்றும் 1/2 கிலோ வெங்காயத்திற்கு, ஒரு குழம்பு கரண்டியால் அளந்து 4 கரண்டி எண்ணெய் மற்றும் 8 கரண்டி தண்ணீர் ஊற்றவும். எண்ணெய் மற்றும் தண்ணீரை மாவு மீது ஊற்றாமல், பக்கவாட்டில் (ஓரமாக) ஊற்ற வேண்டும். அப்போதுதான் கலக்கும்போது பொருட்கள் சரியாகக் கலக்கும். முதலில் கடலை மாவைச் சேர்க்காமல் மற்ற அனைத்துப் பொருட்களையும் மெதுவாகக் கலக்கவும். பிறகு 1 கிலோ கடலை மாவைச் சேர்த்து, விரல்களால் பூப்போல (மிகவும் லேசாக) மெதுவாகப் புரட்டிப் பிசையவும்.
மாவை அழுத்திப் பிசைந்தால், அது கெட்டிப்பட்டு, எண்ணெயில் போட்ட பின் கடினமான 'கல்' பக்கோடாவாக மாறிவிடும். மாவு பூப்போல இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயை ஊற்றி, அது சுமார் 60% முதல் 70% சூடாக (80% சூடு போதும்) இருக்கும்போது பக்கோடா போட ஆரம்பிக்கவும். பக்கோடாவை எப்போதும் குறைந்த தீயில் வைத்தே பொரிக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் வெளிப்புறம் கருகிவிடும், உள்ளே மாவு வேகாமல் இருக்கும்.
பூப்போல பிரட்டிய மாவை மெதுவாக, அள்ளி அப்படியே எண்ணெயில் போடவும். மாவு போட்ட உடன் கரண்டியைப் போட்டு கலக்காமல், சுமார் இரண்டு நிமிடங்கள் வெந்த பிறகு மெதுவாகப் புரட்டவும். அதிகம் பிரட்டினால் உடைந்து தூளாகிவிடும். எண்ணெயில் உள்ள நுரை (பபுள்ஸ்) அடங்கத் தொடங்கி, லேசாக 10% நுரை இருக்கும்போது, பக்கோடாவை எண்ணெயிலிருந்து எடுக்கவும். மொறுமொறுப்பான, சுவையான கெட்டி பக்கோடா தயார்! இது எண்ணெய் பிடிக்காமல், மெதுவென்று, பிஸ்கட் போலவே மொறுமொறுப்புடன் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us