/indian-express-tamil/media/media_files/2025/10/30/curry-2025-10-30-15-28-29.jpg)
பொதுவாக நாம் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, வெங்காய சட்னி, வேர்க்கடலை சட்னி வைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால், கறிவேப்பிலை சட்னி வைத்து சாப்பிட்டிருக்க மாட்டோம். ஆமாம், கறிவேப்பிலையில் தொக்கு மட்டுமல்லாமல் சட்னியும் செய்யலாம். கறிவேப்பிலை உடல் கொழுப்பை குறைக்க பயன்படுவதாக கூறப்படுகிறது. தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
கறிவேப்பிலை முடி வளர்வதற்கு ஒரு சிறந்த மருந்தாகும். நம் உணவில் அதிகப்படியான கறிவேப்பிலை சேர்த்து உண்ணும் பொழுது முடி உதிர்வு குறைகிறது. அதுமட்டுமல்லாமல், காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது. கறிவேப்பிலை நமது செரிமான பாதையை சுத்தப்படுத்தி செரிமானத்தை சீராக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையை வைத்து சட்னி எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
கறிவேப்பிலை
பூண்டு
புளி
உப்பு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தாராளமாக கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாருக்கு மாற்றி இடித்த பூண்டு, உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொண்டால் அட்டகாசமான கறிவேப்பிலை சட்னி ரெடியாகிவிடும். இந்த சட்னியை நீங்கள் ஒரு வாரத்திற்கு வைத்து சாப்பிடலாம். ஆனால், இந்த சட்னியின் சுவை உங்களை ஒருவாரம் எல்லாம் விட்டுவைக்க விடாது உடனே காலியாகிவிடும். இந்த கறிவேப்பிலை சட்னியை இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றுக்கும் காம்பினேஷனாக வைத்து சாப்பிடலாம்.
பொதுவாக உணவுகளில் உள்ள கறிவேப்பிலையை நாம் ஒதுக்கி வைப்பது வழக்கம். ஆனால், இண்டஹ் சட்னி மூலம் கறிவேப்பிலையை நாம் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை முடி உதிர்வை குறைக்கும் என்பதால் இந்த சட்னியை வாரத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. கறிவேப்பிலையை வைத்து சட்னி மட்டுமல்லாமல் கறிவேப்பிலை குழம்பு, கறிவேப்பிலை பொடி ஆகியவற்றையும் செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலை பொடியை நாம் இட்லி தோசை மீது தூவியோ இல்லை அதனுடன் வைத்தோ சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us