/indian-express-tamil/media/media_files/2025/10/27/ragi-2025-10-27-15-40-24.jpg)
ராகியில் அதிகப்படியான ஊட்டச்சத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ராகிக்கு பசியை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. ராகியில் நாம் உணவு செய்து சாப்பிடும் போது அதிக நேரத்திற்கு பசி ஏற்படாது. வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வெயில் காலங்களில் ராகியில் கூழ் செய்து குடிக்கும் பொழுது நம் உடல் சூடு தணிகிறது.
ராகி அதிக அளவில் கால்சியம் சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எலும்பு உறுதிக்கு இது மிகவும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் இதில் ஏராளமாக உள்ளன. இப்படி பல நன்மைகள் நிறைந்த ராகியை வைத்து எப்படி ரொட்டி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 200 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 4
பச்சரிசி மாவு - 50 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
மல்லி இலை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவற்றை விழுதாக இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு எடுத்துக் கொள்ளவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். பச்சரிசி மாவு சேர்க்கும் பொழுது சுவை நன்றாக இருக்கும். இதில் தேங்காய் துருவல் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும். மேலும், மல்லி இலை, கறிவேப்பிலை, அரைத்த கலவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
ராகி மாவில் எண்ணெய் சேர்க்கும் பொழுது ரொட்டி மிகவும் டேஸ்ட்டாக இருக்கும். மாவு, சப்பாத்தி மாவு பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் தண்ணியாக இருக்க வேண்டும். இந்த மாவு பத்து நிமிடங்கள் நன்கு ஊறிய பின்னர் தேவைக்கேற்ப சின்ன உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். ஒரு இலையில் சிறிது எண்ணெய் தடவி நாம் பிடித்து வைத்த உருண்டையை வைத்து நன்கு வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை தோசை தவாவில் போட்டி ஒரு பக்கத்திற்கு இரண்டு நிமிடங்கள் என வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி ரொட்டி ரெடியாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us