/indian-express-tamil/media/media_files/2025/10/16/chapathi-2025-10-16-15-20-35.jpg)
சப்பாத்தி என்றால் நம் அனைவருக்கும் பிடிக்கும் அதுவும் புசுபுசு சப்பாத்தி செய்து தந்தால் சொல்லவே வேண்டாம் எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். ஆனால், இந்த சப்பாத்தியை சாஃப்டாக செய்வதில் தான் பெரும் சவாலே உள்ளது. சிலர் சப்பாத்தி புதுபுது என்று வரவேண்டும் என மெல்லிசாக போடுவார்கள். அந்த சப்பாத்தி கொஞ்ச நேரத்திலேயே காய்ந்து போய்விடும். இதனால் நமக்கு சப்பாத்தி சாப்பிடும் மூடே போய்விடும்.
சிலர் சப்பாத்தி காய்ந்து பேய்விடும் என்று தடிமனாக போடுவார்கள். அதை கடித்து மென்று சாப்பிடுவதற்குள் நம் வாய் வலிக்க ஆரம்பித்துவிடும். இப்படி சப்பாத்தி சாஃப்டாக போடுவதில் பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால், இனி அந்த கவலையில்லை வேண்டாம் மிருதுவான சப்பாத்தியை நொடி பொழுதில் எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். சப்பாத்தி நல்ல புசு புசுன்னு உப்பி வர சப்பாத்தி மாவில் உப்பு சேர்த்துவிட்டு நல்ல சூடான தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்கும் வெந்நீரை தேவையான அளவு சேர்த்துவிட்டு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யை தேவையான அளவு சேர்த்து ஒரு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மூடிபோட்டு ஊற வைத்துவிடுங்கள். அதன்பிறகு சப்பாத்தி மாவை பிசைந்து சப்பாத்தி போடுங்கள். சப்பாத்தி போடும் போது தோசைக்கல்லில் முதலில் சப்பாத்தியை போட்டுவிட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட வேண்டும். அதற்கு முன்பு எண்ணெய் ஊற்ற வேண்டாம். இரண்டு பக்கமும் கொஞ்சம் வெந்ததும் எண்ணெய் ஊற்றுங்கள். சப்பாத்தி போட்ட உடனே எண்ணெய் ஊற்றினால் சப்பாத்தி புசுபுசுனு வராது.
அதுமட்டுமல்லாமல், இப்படி செய்யும் பொழுது சப்பாத்தி ரொம்ப நேரம் சாப்டாக இருக்கும். மற்றொரு டிப்ஸ் என்னவென்றால் உப்பு வைக்கும் பாத்திரத்தில் காய்ந்த மிளகாய் போட்டு வைப்பது நல்லது. இல்லையென்றால், உப்பு தண்ணீர் விட ஆரம்பித்துவிடும். அதேபோன்று புளி வைக்கும் பாத்திரத்திலும் உப்பு போட்டு வைத்தால் புளி கெட்டுப்போகாமல் இருக்கும். அடுத்து நாம் குக்கரில் பருப்பு வேக வைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் பருப்பு வெளியில் பொங்கி வராது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.