/indian-express-tamil/media/media_files/2025/06/21/soya-gravy-recipe-2025-06-21-13-23-04.jpg)
சோயா சங்ஸ் உடலுக்குத் தேவையான உயர்தர புரதச் சத்தை வழங்குவதுடன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களால் எலும்புகளை வலுப்படுத்தவும், அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறைந்த செலவில், அதிக சத்துக்களைக் கொடுக்கக்கூடிய இந்த சோயா சங்ஸை வைத்து, அருமையான கிரேவி செய்வது எப்படி என்று 2மினிட்ஸ்செஃப் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
தனியா
மிளகு
சீரகம்
சோம்பு
பூண்டு
இஞ்சி
சின்ன வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி இலை
புதினா இலை
சோயா சங்ஸ்
பட்டை
கிராம்பு
கல்பாசி
பெரிய வெங்காயம்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
செய்முறை:
தேவையான அளவு சோயா சங்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். ஊறிய சோயா சங்ஸை தண்ணீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசவும்.பிறகு, சோயா சங்ஸ்களில் உள்ள தண்ணீரை முழுவதுமாக கைகளால் அழுத்திப் பிழிந்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்வது, கிரேவியின் சுவையை சோயா சங்ஸ் உறிஞ்சிக்கொள்ள உதவும்.
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.முதலில் தனியா, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வறுக்கவும். பின்பு பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். கடைசியாக தக்காளி, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.இந்தக் கலவையை ஆற வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து, நைஸான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.எண்ணெய் சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி போன்ற தாளிப்பு மசாலாக்களைப் போட்டு பொரிய விடவும்.4பின்னர் நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தீயை குறைத்து, மசாலா வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்கவும்.
இப்போது, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை முழுவதுமாக நீங்கி, எண்ணெய் மேலே பிரியும் வரை நன்றாகக் கொதிக்க விடவும். இதற்கு சுமார் 5-7 நிமிடங்கள் ஆகலாம். தேவையான அளவு உப்பு மற்றும் கிரேவிக்குத் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 1 கப்) சேர்த்து கலக்கவும். கிரேவி கொதிக்கத் தொடங்கியதும், பிழிந்து வைத்திருக்கும் சோயா சங்ஸைச் சேர்த்து, மசாலா முழுவதும் சோயா சங்ஸில் சேரும்படி மெதுவாகக் கலக்கவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் மூடி வைத்து வேக விடவும். சோயா சங்ஸ் மசாலாவை உறிஞ்சி, கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.இப்போது, சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை அல்லது சாதத்துடன் சாப்பிட ஏற்ற சுவையான, ஆரோக்கியமான சோயா சங்ஸ் கிரேவி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us