/indian-express-tamil/media/media_files/2025/10/18/kollu-thhu-2025-10-18-13-48-21.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, உடல் நல பிரச்சனைகள் மூலம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகள் உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அதனுடன் உணவில் கொள்ளை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம்.
கொள்ளு உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது. அதிக எடை மற்றும் தொங்கும் தசை உள்ளவர்கள் உடற்பயிற்சியுடன் இந்த கொள்ளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை சீக்கிரம் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. கொள்ளு உடம்பில் சூட்டை ஏற்படுத்துவதால் மாதவிடாய் காலங்களில் கொள்ளை உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் மருத்துவர்கள் ஆலோசனையுடன் உணவில் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறதோ அதேபோன்று கொள்ளும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைய வைக்க உதவுகிறது. கொள்ளு, புரதம், இரும்புச்சத்து, கால்சியம், மற்றும் மாலிப்டினம் போன்ற தாதுக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். குறிப்பாக, சைவ உணவுகளில் அதிக புரதச்சத்தையும் கால்சியத்தையும் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கும் மூல நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்ட கொள்ளு துவயலை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு
பூண்டு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
தேங்காய்
புளி
எண்ணெய்
செய்முறை
கொள்ளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெள்ளைப் பூண்டை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கம். வறுத்து எடுத்து வைத்த கொள்ளை முதலில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேங்காய் கலவையை சேத்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தாளிப்பு சேர்த்தால் கொள்ளு சட்னி ரெடியாகிவிடும். இதனை இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சுவை சூப்பராக இருக்கு. கொள்ளை வைத்து சட்னி மட்டுமல்லாமல் ரசம், சூப், சாதப்பொடி மற்றும் பல வகை குழம்புகளும் செய்து சாப்பிடுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us