சாப்பிட பிடிக்கலையா? இந்த சூப் கொஞ்சம் குடிங்க; பசி வயிற்றை கிள்ளும்!

சிலருக்கு சாப்பிடவே தோன்றாது அதுமட்டுமின்றி சிலருக்கு பசியே எடுக்காது அப்படி இருப்பவர்கள் இந்த சூப்பை ஒருமுறை குடித்தாலேபோதும், பசி வயிற்றை கிள்ளும்.

சிலருக்கு சாப்பிடவே தோன்றாது அதுமட்டுமின்றி சிலருக்கு பசியே எடுக்காது அப்படி இருப்பவர்கள் இந்த சூப்பை ஒருமுறை குடித்தாலேபோதும், பசி வயிற்றை கிள்ளும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
ginger garlic soup

சோர்வு, உடல்நலக்குறைவு அல்லது மழைக்கால குளிர்ச்சியால் சில சமயம் சாப்பிடவே பிடிக்கவில்லையா? அல்லது உண்ட உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் கனமாக இருக்கிறதா? இதற்கெல்லாம் சிறந்த தீர்வு, நம் பாரம்பரிய சமையலறையில் ஒளிந்திருக்கும் ஒரு எளிய அற்புதத்தில் உள்ளது. அது இஞ்சி தனியா சூப்தான். இதைச் செய்து குடித்தால், உங்கள் பசி உணர்வு தூண்டப்பட்டு, உணவு நன்கு செரிமானம் ஆவதுடன், தொண்டைக்கும் இதமளிக்கும். மழைக்காலத்திற்கு இது ஒரு வரப்பிரசாதம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

தனியா 2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு 1 ஸ்பூன்  

செய்முறை:

முதலில் தனியா, சீரகம், மற்றும் மிளகு ஆகியவற்றை சிறிது நேரம் சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறியபின், இவற்றுடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் தோல் சீவி நறுக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டியைக் கொண்டு நன்கு வடிகட்டி சாறு மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

வடிகட்டிய சாற்றை அடுப்பில் வைத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ருசியைக் கூட்டுவதற்காக சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சூப் நன்கு கொதித்ததும், ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதை கொதிக்கும் சூப்பில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். இது சூப்பிற்கு ஒரு மிதமான கெட்டியான தன்மையை கொடுக்கும். சூப் ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இஞ்சி செரிமானத்திற்கு உதவும் என்சைம்களைத் தூண்டி, உடனடியாகப் பசியை ஏற்படுத்தும். தனியா மற்றும் மிளகு, ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Reasons you are feeling hungry all the time Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: